Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

100 நாள் வேலை.. கிடா வெட்டி பிரியாணி விருந்து.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஊராட்சி தலைவர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
100 நாள் வேலை.. கிடா வெட்டி பிரியாணி விருந்து.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஊராட்சி தலைவர்
53
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விழுப்புரம்: 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த கிராமத்தினருக்கு திடீரென இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பணிபுரிபவர்களுக்கு கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இப்படி ஒரு நெகிழவான சம்பவம் நடந்துள்ளது. அவர் பிரியாணி விருந்து வைத்ததர்களுக்கு சொன்ன காரணம் தான் உண்மையில் நெகிழ்ச்சியானது. அதாவது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாது என்று நினைத்திருக்கிறார் ஊராட்சி மன்ற தலைவர்.

அதற்கு இறைவனிடம் வேண்டிவிட்டு அய்யனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை செய்து பிரியாணி கொடுத்துள்ளார், 100 நாள் வேலை திட்டம் என்பது இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள வயது முதிர்ந்த மற்றும் கைவிடப்பட்ட முதியாருக்கும், பெண்களுக்கும் சுயமரியாதையுடன் பணம் தரும் திட்டமாக உள்ளது. மாதத்தில் 3 முதல் 4 நாட்கள் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வரும் வகையில் வேலை தரப்படுகிறது. இந்த மாதம் ஆயிரம் தொகையுடன் முதியோர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் (இனி 1200) அவர்கள் யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ உதவுகிறது. இது தவிர ஏழை பெண்கள் பலர் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து கூலி வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் அளவிற்கு ஊதியம் கிடைக்கிறது. கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு: சர்ச்சைக்குரிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது அதேநேரம் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால் 100 நாள் வேலைகளை அந்த கிராமத்தில் வேலை இல்லாத நாட்களில் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அதற்கான சூழல்களை மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆசூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். இவர் தேமுதிகவைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரது கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குளம், வாய்க்கால், ஏரி போன்றவைகல் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பாக பணி புரியவேண்டும், பணியின் போது அவர்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாதென்ற நோக்கத்தில் அய்யனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை செய்ய நினைத்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். அதன்படியே இன்று அய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 8 கிடா வெட்டி மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தலை வாழை இலை போட்டு பிரியானி விருந்து வைத்திருக்கிறார் ஞானசேகரன். ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து கடவுளிடம் வேண்டி, கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சட்டப்பேரவை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் பதில்: ஐகோர்டில் அரசு தகவல்

Next Post

“2024-ல் பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது” – முதல்வர் ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது" - முதல்வர் ஸ்டாலின்

"2024-ல் பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது" - முதல்வர் ஸ்டாலின்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    100 நாள் வேலை திட்டத்திற்கு வந்த ஏழை மக்களுக்கு கிடா வெட்டி நிறைய உணவு அளித்த ஊராட்சி தலைவர் ஞானசேகரின் செயல் மிகவும் வரவேற்க வேண்டியது இவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல இவரின் செயலை பாராட்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In