Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காட்டு தீயை அணைக்க முயன்ற விமானம்.. மலையில் மோதி விபத்து.. பறிபோன 3 உயிர்கள்.. கிரீஸில் சோகம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காட்டு தீயை அணைக்க முயன்ற விமானம்.. மலையில் மோதி விபத்து.. பறிபோன 3 உயிர்கள்.. கிரீஸில் சோகம்
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஏதென்ஸ்: கிரேக்க நாட்டில் காட்டு தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், விமானம் மூலம் அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு துறையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிரேக்கின் எவியா தீவில் உள்ள கரிஸ்டோஸ் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு தீ பரவி வருகிறது. தீவில் எராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதனை பாதுகாக்க வேண்டும். மட்டுமல்லாது இங்கு ஏற்பட்டுள்ள தீ பக்கத்து தீவில் உள்ளவர்களுக்கு கடுமையான சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வரவில்லை. தற்போது வரை தீவின் 10 சதவிகித நிலப்பரப்பு தீயால் முழுவதுமாக எரிக்கப்பட்டுள்ளது. காற்று பலமாக வீசி வருவதால் தீ மேலும் தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில், விமானம் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து 34 மற்றும் 27 வயதான இரண்டு விமானிகள் CL-215 விமானம் மூலம் இப்பணியை மேற்கொண்டனர். இந்த வகை விமானங்கள் காட்டு தீயை அணைக்கவும், கடல்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், குறைவான வேகத்தில் கூட இதனால் பறக்க முடியும் என்பதுதான்.

அதேபோல அதிகபட்சமாக 348 கி.மீ வேகத்தில் பறக்கும். மேலும் எவ்வளவு பலத்த காற்று வீசினாலும் கூட இந்த விமானத்தால் நிலையாக பறக்க முடியும். கனடா உருவாக்கிய இந்த விமானம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் வழக்கம் போல இந்த விமானிகளை CL-215ஐ எடுத்துக்கொண்டு தண்ணீரை சேகரித்துள்ளனர். பின்னர் காட்டு பகுதியில் அதனை ஊற்றியுள்ளனர். இதனையடுத்து எதிரில் உள்ள மலையில் மோதாமல் இருப்பதற்காக விமானத்தை வலது பக்கம் திருப்பிய அவர்கள் மலையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த மலையில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஒரு முதியவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்திற்கு முக்கிய காரணம் விமானம் ஸ்டாலிங் ஆனதுதான் என்று முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை இந்த தீவின் மலை பகுதியிலிருந்து சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 2000 பேர் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

’நியோ- மேக்ஸ்’ நிறுவன மோசடி: மதுரையில் எல்ஐசி முன்னாள் அலுவலர் கைது

Next Post

சட்டப்பேரவை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் பதில்: ஐகோர்டில் அரசு தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சட்டப்பேரவை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் பதில்: ஐகோர்டில் அரசு தகவல்

சட்டப்பேரவை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் பதில்: ஐகோர்டில் அரசு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In