Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்- பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்- பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லடாக்: தேவைப்படுகிற சூழ்நிலையில் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கார்கில் யுத்தத்தின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் இன்னுயிர் நீத்த தேசத்தின் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றன. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கார்கில் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி உள்ளனர். லடாக்கின் திராஸ் போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு படை தளபதிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

திராஸ் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: கார்கில் யுத்தம் இந்தியா மீது திணிக்கப்பட்டது. இந்தியா அப்போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தது. கார்கில் யுத்தத்தில் ஆபரேஷன் விஜய் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்திய ராணுவம் வலிமையான ஒரு செய்தியை சொல்லி இருந்தது. இந்தியாவின் நலன்களுக்கு ஆபத்து எனில் இந்திய ராணுவம் எந்த விலை கொடுத்தேனும் அதனை முறியடிக்கும்; ஒரு போதும் பின்வாங்காது என்பதுதான் அந்த செய்தி.

இரு நாடுகளுக்கான யுத்தம்: கார்கில் யுத்தம் என்பது இரு ராணுவங்களுக்கு இடையேயானது மட்டுமல்ல.. இரு தேசங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்தது. கார்கில் யுத்தம் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முடிவடைந்தது. அதன்பின்னர், கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை. எல்லை தாண்டுவோம்: இந்தியா அமைதியை விரும்புகிறது. இந்தியா அமைதியை விரும்புவதால்தான் கார்கில் யுத்தத்தில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செலல்வில்லை. நாம் ச்ர்வதேச சட்டங்களை மதிப்பவர்கள். எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அன்று தாண்டி செல்லவில்லை என்பதால் நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்ட முடியாது என்பது அர்த்தம் அல்ல. நாம் எல்லை கட்டுப்பாட்டை தாண்டுவோம். நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டவும் முடியும். எதிர்காலத்தில் அப்படியான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டால் நாம் நிச்சயம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டுவோம் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

ராயப்பேட்டையில் சேதமான சாலை சீரமைப்பு

Next Post

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டார்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In