Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அய்யா முடியல! மனைவியும், மாமியாரும் திட்றாங்க! மேடையில் உடைந்து அழுத விசிக நிர்வாகி!..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அய்யா முடியல! மனைவியும், மாமியாரும் திட்றாங்க! மேடையில் உடைந்து அழுத விசிக நிர்வாகி!..
40
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தென்காசி: தென்காசி மாவட்டம் செவல்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‛‛மனைவியும், மாமியாரும் திட்டி கட்சியை விட்டு விலகும்படி கூறுகின்றனர்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்பு நிர்வாகி ஒருவர் மேடையிலேயே கண்கலங்கி பேசியது உருக்கமாக இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருக்கிறார். இந்நிலையில் தான் திருமாவளவனின் 60வது மணிவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் அந்த கட்சியினர் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வரிசையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செவல்குளம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்றார். திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க நிர்வாகிகள் திருமாவளவனை வரவேற்றனர். இதையடுத்து செவல்குளம் கிராமத்தில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திருமாவளவன் கட்சி கொடியேற்றினார். அதன்பிறகு சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் ஜெரால்ட்-பிரியா தம்பதியின் ஆண் குழந்தைக்கு ‛தொல்காப்பியன்’ என திருமாவளவன் பெயர் சூட்டினர்.

இதையடுத்து நிகழ்ச்சிக்கான மேடையில் ஜெரால்ட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த இடத்தில் கொடிக்கம்பம் கொண்டு வர போராடினோம். கண்ணீர் விட்டோம். காவல்துறை தரப்பில் இருந்து அதிக நெருக்கடி வந்தது. பெரிய யுத்தமே நடந்தது. என் மனைவி, அத்தை (மாமியார்) ஆகியோர் ‛‛இதுவெல்லாம் தேவையில்லை” என திட்டி சொல்லகூடிய வகையில் நெருக்கடி இருந்தது. கட்சியினர் யாரும் உதவி செய்யவில்லை. இத்தகைய சூழலில் என் மகனுக்கு பெயர்சூட்ட வந்துள்ள உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்” என பேசிவிட்டு திருமாவளவனின் காலை தொட்டு வணங்கினார். மேலும் இந்த வேளையில் அவர் உடைந்து கண்கலங்கினார்.

இதையடுத்து ஜெரால்ட்டை, திருமாவளவன் தேற்றினார். இதையடுத்து திருமாவளவன் பேசினார். அப்போது, ‛‛விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் வளர்ந்து வலிமை பெற்று வருகிறது. வருகிறது. சனாதனத்தை எதிர்க்கும் துணிச்சல் இயக்கமாக உள்ளது. உண்மையான அம்பேத்கர் இயக்கமாகவும், உண்மையான பெரியார் இயக்கமாகவு்ம இயங்கி வருகிறது. இந்த இயக்கத்தை மேன்மெலும் வலிமைப்படுத்துவது உங்களின் அன்பும், நம்பிக்கையும் தான். இந்த கொடியேற்றும் நிகழ்வு குறித்து தழுதழுத்த குரலில் ஜெரால்ட் சில விஷயங்களை பதிவு செய்தார்.

செவல்குளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல இங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். கொடிக்கம்பம் தொடர்பாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இத்தகைய நெருக்கடியிலும் கூட மைய நீரோட்ட அரசியலில் நிலைத்தும் நிமிர்ந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. மற்ற கட்சிகளின் கொடிகள் பறக்கும் அதேஇடத்தில் விசிக கொடியை ஏற்றுவது என்பது பெரிய யுத்தமாக உள்ளது. காவல்துறையே பிடுங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. பதற்றப்பட வேண்டாம். போலீஸ் பிடுங்கி சென்றாலும் அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

இந்த பிரச்சனையை தமிழ்நாட்டில் நாம் பரவலாக எதிர்கொண்டு வருகிறோம். இதனை அமைதியாக கடந்து தான் செல்ல வேண்டும். விசிக கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும். உயர்ந்த ஜாதியினர் என கூறி கொள்வோரால் அரசியலமைப்பு சட்டத்தை எழுத முடியவில்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் எழுதினார். அம்பேத்கரின் சட்டத்தை படித்து தீர்ப்பு எழுதுவதால் அவர்களுக்கு சம்பளம். அம்பேத்கர் எழுதிய சட்டத்தை படித்து வாதாடுவதால் அவர்களுக்கு பிழைப்பு நடக்கிறது.

ஆனால் இன்றைய தினத்தில் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்கின்றனர். நாடு எங்கே செல்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். எல்லாவற்றையும் நாம் கடந்து போவோம். எல்லாவற்றிலும் வெற்றி பெறுவோம்” என பேச்சை முடித்தார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: -முதல்வர்

Next Post

ஆஹா தொடர்ந்து உயர்வு!. ஆவின் பனீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆவின் பனீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

ஆஹா தொடர்ந்து உயர்வு!. ஆவின் பனீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In