Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆடி வெள்ளி.. தக்காளியை தூக்கி சாப்பிட்ட மல்லி, பிச்சி பூக்கள்! விலை இருமடங்காக உயர்வு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆடி வெள்ளி.. தக்காளியை தூக்கி சாப்பிட்ட மல்லி, பிச்சி பூக்கள்! விலை இருமடங்காக உயர்வு
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகர்கோவில்: ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆடி மாதங்களில் திருமணங்கள் நடைபெறாவிட்டாலும், கோயில் திருவிழாக்கள், கொடைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. எனேவே விலையும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிலோ ரூ.200க்கு விற்கப்பட்ட மல்லி தற்போது கிலோ ரூ.500க்கு விற்பனையாகி வருகிறது. சென்னை, மதுரை, கன்னியாகுமரி என மாநிலம் முழுவதும் பூக்களின் விலை இதேபோல கணிசமாக அதிகரித்துள்ளது. மதுரையை பொறுத்த அளவில் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.600க்கு விற்பனையாகிறது. அதேபோல சம்பங்கி ரூ.200, பிச்சி ரூ.500, முல்லை ரூ.400, பட்ரோஸ் ரூ.150, செவந்தி ரூ.250, அரளி ரூ.200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், தேனியிலிருந்தும் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால் கன்னியாகுமரியின் தோவாளை பூ மார்கெட்டுக்கு பூக்கள் அங்கிருந்தே அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. எனவே விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ இதே விலையில்தான் பூக்கள் விற்பனையாகின்றன. இங்கு நேற்று ஒரு கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மல்லிகை விலை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல திருப்பூர் பூ மார்கெட்டிலும் ஒரு கிலோ மல்லி ரூ.450க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.250க்கும், அரளி ரூ.240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி வெள்ளி.. இந்து சமய அறநிலையத்துறையின் ஆன்மீக சுற்றுலா.. அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள் திருப்பூரில் சமீப நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் பூக்கள் உதிர்ந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. தோவாளை, மதுரை, திருப்பூர் என எல்லவற்றிற்கும் டாப்பாக சென்னையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலைதான் பேசு பொருளாக இருந்த நிலையில், தற்போது இந்த பூக்களின் விலை பேசுபொருளாகியுள்ளது. அதாவது முல்லை ஒரு கிலோ ரூ.540க்கும், மல்லி ரூ.630க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும் விற்பனையாகிறது. இது தவிர காக்கரத்தான் ரூ.300, கனகாம்பரம் ரூ.250, ரோஜா ரூ.300, அரளி ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மணிப்பூர் கொடூரம் | குஷ்பு, வானதி சீனிவாசன் எங்கே? – அமைச்சர் கீதாஜீவன் கேள்வி

Next Post

நேபாளத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நேபாளத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

நேபாளத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In