Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோயில் இடத்தில் குடியிருக்கீங்களா.. இவர்களுக்கு எல்லாம் பெரும் சிக்கல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கோயில் இடத்தில் குடியிருக்கீங்களா.. இவர்களுக்கு எல்லாம் பெரும் சிக்கல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
38
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்ளை சட்டவிரோதமாக வாங்கியவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சொத்துக்கள் அனைத்தும் பறிபோகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, அச்சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, குறிப்பிட்ட அந்த நிலம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் எனவும், அதனால் அதற்கு பட்டா வழங்க ஆட்சேபம் தெரிவித்ததாகவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறநிலையத் துறை தரப்பில், கோவில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள், அறநிலையத் துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அறநிலையத் துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பேராசை பிடித்த சிலரின் இந்த மோசடியில் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்… இருப்பினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனக் கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

தமிழக முதல்வர் குறித்து அவதூறு: கடலூர் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கைது

Next Post

விவசாயிகள், பொதுமக்களின் வரவேற்பை இழந்த ஆவடி உழவர் சந்தைக்கு உயிரூட்டப்படுமா? – அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விவசாயிகள், பொதுமக்களின் வரவேற்பை இழந்த ஆவடி உழவர் சந்தைக்கு உயிரூட்டப்படுமா? - அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை

விவசாயிகள், பொதுமக்களின் வரவேற்பை இழந்த ஆவடி உழவர் சந்தைக்கு உயிரூட்டப்படுமா? - அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In