Thursday, September 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘அந்த’ பெயர்? மமதா, கெஜ்ரிவால் எதிர்ப்பு!பெங்களூரில் இன்று அறிவிப்பு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘அந்த’ பெயர்? மமதா, கெஜ்ரிவால் எதிர்ப்பு!பெங்களூரில் இன்று அறிவிப்பு?
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூர்: மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் பெங்களூரில் திரண்டுள்ள நிலையில் இந்த கூட்டணிக்கான பெயர் என்ன என்பது இன்று இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23-ந் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதனைத் தொடர்ந்து தற்ப்பொது மொத்தம் 26 கட்சிகள் பெங்களூரில் திரண்டுள்ளன. 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று 2-வது நாள் கூட்டத்தில் எதையெல்லாம் விவாதிப்பது என ஆலோசிக்கப்பட்டது.

அஜெண்டா: இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது? பொது செயல் திட்டத்தை எப்படஉருவாக்குவது, அனைத்து எதிர்க்கட்சிகளும் எப்படி ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. கூட்டணி பெயர்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயர் ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த பெயருக்கு மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் புதிய பெயர் ஒன்ற தேர்வு செய்வது தொடர்பாக இன்று ஆலோசிக்கப்பட இருக்கிறது. தேசிய அளவில் ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என எதிர்க்கட்சிகள் கூட்டணி முன்னர் செயல்பட்டிருக்கிறது. இந்த பெயர்களை பிரதிபலிப்பது போல ஒரு புதிய பெயர் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திரா காந்தி ஆட்சியையே வீழ்த்திய எதிர்க்கட்சிகள் ஒற்றுமை.. இதுதான் ஜனநாயகத்தின் பலம்! பிளாஷ் பேக் பொதுசெயல் திட்டம்: மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பொது செயல் திட்டத்தை உருவாக்க ஒரு துணை குழுவை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. நாட்டில் முந்தைய கூட்டணிகள் பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டிருக்கின்றன. அதனையே முன்னுதாரணமாக கொண்டு பொதுசெயல் திட்டம் உருவாக்கப்படலாம். ஒருங்கிணைப்பு: அத்துடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து செயல்படுவதற்கான ஒரு தலைமை அலுவலகம் குறித்தும் இந்த தலைமை ஒருங்கிணைப்பு பணியை யார் மேற்கொள்வது என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறத என்கின்றன பெங்களூர் தகவல்கள்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் – வழக்கறிஞர் பேட்டி

Next Post

சென்னை | கட்சி நிர்வாகியின் பேனரை கிழித்த விவகாரம்: திமுக பெண் கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | கட்சி நிர்வாகியின் பேனரை கிழித்த விவகாரம்: திமுக பெண் கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

சென்னை | கட்சி நிர்வாகியின் பேனரை கிழித்த விவகாரம்: திமுக பெண் கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In