Saturday, September 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. வீட்டில் குவிந்த அதிகாரிகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. வீட்டில் குவிந்த அதிகாரிகள்
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

பொன் முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சைதாப்பேட்டை தி நகர் இல்லை, சென்னையில் உள்ள பொன் முடி மகன் இல்லம், விழுப்புரம் இல்லம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் பொன்முடி இல்லத்தில் மட்டும் மொத்தம் 50 அதிகாரிகள் குவிந்து உள்ளனர். அவரின் அலுவலகத்தில் 50 அதிகாரிகள் குவிந்து உள்ளனர். அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு உள்ளது. துணை ராணுவப்படை உதவியுடன் போலீஸ் இல்லாமல் ரெய்டு நடக்கிறது. அமைச்சர் பொன் முடி இப்போது எந்த இல்லத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.

அதேபோல் அமைச்சர் பொன் முடி வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு என்ன காரணம் என்று விவரம் வெளியிடப்படவில்லை. சோதனைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. என்ன வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது என்று அமலாக்கத்துறை கூறவில்லை.

அமலாக்கத்துறை அதிரடி மூவ்.. செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு! சமீபத்தில்தான் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.

தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்று பொன் முடி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. ஆனால் அமைச்சர் பொன் முடி வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு என்ன காரணம் என்று விவரம் வெளியிடப்படவில்லை. சமீபத்தில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். அவர் வீட்டில் ரெய்டு மற்றும் கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறை பொதுவில் வெளியிடவில்லை. அதே சமயம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது பொன் முடி வீடுகளில் ரெய்டு நடக்கிறது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Next Post

புதுச்சேரி அருகே கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு; ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் புகுந்த மினி லாரி – 3 பேர் மரணம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரி அருகே கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு; ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் புகுந்த மினி லாரி - 3 பேர் மரணம்

புதுச்சேரி அருகே கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு; ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் புகுந்த மினி லாரி - 3 பேர் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In