சென்னை: தூர்தர்ஷன் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி அசைவ உணவுக்கு எதிராக போட்டிருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் பிரளயத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகள் வருகைக்கு முந்தைய காலம்.. 1980களில் ஷோபனா ரவி என்ற பெயரை தமிழ்நாடு மறந்திருக்காது.. அப்போது இருந்த ஒரே ஒரு டிவி சேனல் தூர்தர்ஷன். 1970களின் இறுதியில் தொடங்கி நீண்டகாலம் தூர்தர்தஷன் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ஷோபனா ரவி. அவரது உச்சரிப்பு, உடை அனைத்தையும் ரசித்து ஏற்றுக் கொண்ட ஒரு ஜெனரேஷன் இருந்தது.. அவரையே முன் மாதிரியானவராக கொண்டு செய்தி வாசிப்பாளர்களாக கோலோச்சுகிறவர்கள் இன்றும் உண்டு.
என் குருநாதரோடு நடந்த ஒரு சம்பாஷணையை நினைவு படுத்திக் கொள்கிறேன்.🙏🪷”அசைவ உணவு சாப்பிடுவது பற்றி என்ன சொல்கிறீர்கள் டாக்டர்?””அது அவங்கவங்க இஷ்டம்பா. ஆனா non-veg சாப்பிட்டால் புருவ மத்தியில இருக்கும் மாயைத் திரை, அந்த ஜவ்வு இன்னும் கெட்டியாயிடும். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் ஷோபனா ரவி. அவ்வப்போது அரசியல் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார் அவர். வள்ளலார் படத்தில் திருநீறு இல்லாமல் இருந்த விவகாரத்தில், திருநீறு இல்லாத வள்ளலார் படத்தை பார்த்தால் 40 வருடங்களுக்கு முன்னர் வரை வீடுகளில் வளைய வந்த பிராமண விதவைகளைப் போல் இருக்கிறது. அவர் விபூதியை அழித்தவர்களுக்கு நான் மானசீகமாக நாமம் போட்டுப் பார்க்கிறேன் என பதிவிட்டது விவாதப் பொருளானது.
இந்நிலையில் அசைவ உணவுமுறைக்கு எதிராக ஷோபனா ரவி பதிவிட்டுள்ள ஒரு கருத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் பிரளயத்தையும் விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது. ஷோபனா ரவியை ஞாபகம் இருக்கா.. திருநீறு மிஸ்ஸிங்.. “டபுள் ஸ்கோர்” செய்யும் திமுகவின் ஆன்மீக அரசியல் ஷோபனா ரவி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: என் குருநாதரோடு நடந்த ஒரு சம்பாஷணையை நினைவு படுத்திக் கொள்கிறேன். “அசைவ உணவு சாப்பிடுவது பற்றி என்ன சொல்கிறீர்கள் டாக்டர்?” “அது அவங்கவங்க இஷ்டம்பா. ஆனா non-veg சாப்பிட்டால் புருவ மத்தியில இருக்கும் மாயைத் திரை, அந்த ஜவ்வு இன்னும் கெட்டியாயிடும். நமக்கு உள்ளே ஓடிக்கிட்டிருக்கிற பிராண சக்தி அந்த ஜவ்வை கிழிச்சுகிட்டு மேல போய் இறைவனோட தரிசனத்தைப் பெற முடியாது. ஞானம் அடைய முடியாது. Very difficult! ஞானம் அடையணும்னு விருப்பப் படுகிறவங்க vegetarian diet சாப்பிடறது நல்லது.” இவ்வாறு ஷோபனா ரவி பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில்கள் தர அதற்கும் ” இதைத் தான் வள்ளலாரும் சொன்னார். வள்ளுவரும் கீழ்க்கண்ட குறளில் சொன்னது இதைத் தான். வள்ளுவரையும் எள்ளி நகையாடுவீர்களா? புலால் மறுத்தல் “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.” என இன்னொரு விளக்கமும் தந்துள்ளார். இப்பதிவில் எழுத்தாளர் @senbalan, அந்த ஜவ்வு கபாலம் எனப்படும் மண்டை ஓட்டிற்கு உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். பத்திரிகையாளர் @tnrags, மேடம், நீங்க ஒரு brilliant news reader. இந்த மாதிரி புரளியைப் பரப்பாதீங்க என அட்வைஸ் செய்துள்ளார். @KMuthusaidai என்ற பதிவர் உலக அளவில் அறிவும், திறனும் பெற்ற பலபேர் அசைவ உணவு தான் சாப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக மாட்டுக்கறி.. அறிவியல் நிறைய வளர்ந்திருக்கு மேடம், கொஞ்சம் அந்த பக்கமும் பாருங்க, குருநாதரை மட்டுமே நினைத்து கொண்டு இருக்க வேண்டாம்! பதில் தந்துள்ளார்.

