Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இதுதான் அதிரடி.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய குட் நியூஸ்.. ஆகா எவ்வளவு வேகம் பாருங்க!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 14, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
இதுதான் அதிரடி.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய குட் நியூஸ்.. ஆகா எவ்வளவு வேகம் பாருங்க!
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1063.37 கோடி ஒப்பந்தமானது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்துடன் ரூ.1063.37 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1063.37 கோடி ஒப்பந்தமானது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு ரூ.1063.37 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை (மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ) ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரணவ் குமார் (தொழில்நுட்பம்) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு). கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே (சுரங்கப்பாதை), மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்., என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ பயணம் இனி திக்திக்தான்.. களமிறக்கப்படும் டிரைவர் இல்லாத ரயில்கள்.. எப்படி இயங்கும்? சென்னை மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 116 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை – 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும். இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு 8 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது.

Next Post

குடியாத்தம் அருகே டபுள் டெக்கர் ரயிலில் திடீர் புகை – பயணிகள் அதிர்ச்சி; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குடியாத்தம் அருகே டபுள் டெக்கர் ரயிலில் திடீர் புகை - பயணிகள் அதிர்ச்சி; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

குடியாத்தம் அருகே டபுள் டெக்கர் ரயிலில் திடீர் புகை - பயணிகள் அதிர்ச்சி; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In