Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை | போலியாக ஆவணங்களை உருவாக்கி ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: 5 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 2, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | போலியாக ஆவணங்களை உருவாக்கி ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: 5 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். வழக்கறிஞரான இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதில், “கோடம்பாக்கம் வாசுதேவன் நகரில் எனக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது.

அதை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஆரோக்கியம், உதவி ஆணையர் ராஜ்பால் மேற்பார்வையில் ஆய்வாளர் பெமிலா ஷெர்லி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் வளசரவாக்கம் ரவி (58), அடையாறு பாஸ்கர் (56), குன்றத்தூர் சுரேஷ் (38), குரோம்பேட்டை மனோகரன் (56), கே.கே.நகர் ஆனந்தன் (58) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இவர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி, அதன் மூலம் நில அபகரிப்பு செய்து முறையற்ற ஆதாயம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

Tags: அபகரபபஆவணஙகளஉரவகககடகதசனனநலமபரபலயகர.3
Previous Post

சென்னை | ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் நிறுவன காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்

Next Post

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கை முடிவுக்கு ஓபிஎஸ் வரவேற்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கை முடிவுக்கு ஓபிஎஸ் வரவேற்பு

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கை முடிவுக்கு ஓபிஎஸ் வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In