Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக கவுன்சிலர் காரில் கடத்தல் – விசிக பிரமுகர்கள் 4 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
திமுக கவுன்சிலர் காரில் கடத்தல் - விசிக பிரமுகர்கள் 4 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். கடையநல்லூர் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலரான இவர், தன்னை விடுதலை

சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். துபாயில் வேலை பார்த்து வரும் கடையநல்லூரைச் சேர்ந்த சேக் உதுமான் என்பவரிடம் வீட்டுமனை வாங்கி தருவதாகக் கூறி கவுன்சிலர் அப்துல் வகாப் ரூ.52 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அவர் வீட்டுமனையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், விசிகவினரிடம் பேசி, அப்துல் வகாப்பிடம் இருந்து பணத்தை வாங்கித் தருமாறு சேக் உதுமான் கூறியுள்ளார். இதையடுத்து, அப்துல் வகாப் அச்சம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் (36), தென்காசி தொகுதி செயலாளர் செல்வம் (42), செங்கோட்டை ஒன்றிய துணை

செயலாளர் விவேக்(30), செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி இளையராஜா(34) உள்ளிட்டோர் அப்துல் வகாப்பை காரில் கடத்திச் சென்று மிரட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய கவுன்சிலர் அப்துல் வகாப், கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடத்தலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் 4 பேரை கைது செய்த போலீஸார், மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

.

Tags: கடததலகதகரலகவனசலரதமகபரபரமகரகளவசக
Previous Post

குஷ்புவுக்கு வந்த சோதனை.. மருத்துவமனையில் அனுமதி.. இடுப்பு எலும்பில் மறுபடியும் சர்ஜரி?

Next Post

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, டிம் குக்.. “லிஸ்ட்டே பயங்கரம்”! டாப் CEOக்களுடன் பேசிய பிரதமர் மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, டிம் குக்.. “லிஸ்ட்டே பயங்கரம்”! டாப் CEOக்களுடன் பேசிய பிரதமர் மோடி

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, டிம் குக்.. “லிஸ்ட்டே பயங்கரம்”! டாப் CEOக்களுடன் பேசிய பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In