Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குஷ்புவுக்கு வந்த சோதனை.. மருத்துவமனையில் அனுமதி.. இடுப்பு எலும்பில் மறுபடியும் சர்ஜரி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள்
0
குஷ்புவுக்கு வந்த சோதனை.. மருத்துவமனையில் அனுமதி.. இடுப்பு எலும்பில் மறுபடியும் சர்ஜரி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Arsath Kan
Published: Saturday, June 24, 2023, 9:14 [IST]
சென்னை: நடிகை குஷ்புவுக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்பட்ட கடும் வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு முன்னர் தான் குஷ்புவுக்கு வால் எலும்பில் நுண்துளை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கடந்த 2 ஆண்டுகளாகவே இடுப்பு பகுதியில் அமைந்துள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்படும் வலியால் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார். உடல் எடையை குறைத்த பின்னரும் இடுப்பு வால் எலும்பில் (Tail bone) குஷ்புவுக்கு வலி குறைந்தபாடில்லை. இதனால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகளை தொடங்கினார். இதனிடையே மருத்துவர்கள் அறுவுரைப்படி கடந்த அக்டோபர் மாதம் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மைக்ரோ இன்சிஷன் முறையில் நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட குஷ்பு அதன் பின்னர் ஓரளவு ஆக்டிவாக இயங்கத் தொடங்கினார். அறுவை சிகிச்சையானது அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டதால் மீண்டும் எலும்பு பகுதியில் வலி உட்பட எந்த பிரச்சனையும் ஏற்படாது என நம்பினார். இதனிடையே இப்போது மீண்டும் அவருக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் வலி ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகுது.. சத்தமில்லாமல் நடக்கும் சம்பவம் இதையடுத்து மீண்டும் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குஷ்பு, பூரண நலம்பெறுவேன் என நம்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனிடையே இது குறித்து தகவலறிந்த அவரது அரசியல் மற்றும் சினிமா நண்பர்கள் குஷ்புவிடம் நலம் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே சிகிச்சைகளை முடித்துக்கொண்டு ஓரிரு நாட்களில் குஷ்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Actress Khushbu has been admitted to the hospital again due to severe pain in the tail bone in the hip bone area.
Story first published: Saturday, June 24, 2023, 9:14 [IST]

.

Previous Post

மேட்டுப்பாளையம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

Next Post

திமுக கவுன்சிலர் காரில் கடத்தல் – விசிக பிரமுகர்கள் 4 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக கவுன்சிலர் காரில் கடத்தல் - விசிக பிரமுகர்கள் 4 பேர் கைது

திமுக கவுன்சிலர் காரில் கடத்தல் - விசிக பிரமுகர்கள் 4 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In