Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டது இரக்கமற்ற செயல்: ராமதாஸ் கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டது இரக்கமற்ற செயல்: ராமதாஸ் கண்டனம்
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: “கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்றுதான் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே அவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இரக்கமற்ற செயல்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 37 பேரை அவர்களின் 5 படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாரை ஒட்டிய இந்திய பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரை கடந்த 14-ஆம் தேதி தான் சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்றுதான் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே அவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இரக்கமற்ற செயல் ஆகும்.

தமிழக மீனவர்களை பழிவாங்க வேண்டும்; மீண்டும், மீண்டும் கைது செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கம் ஆகும். அதன் ஒரு கட்டமாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலையை தாமதிப்பதற்காக புதிய உத்திகளை இலங்கை அரசு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை இலங்கை அரசு திட்டமிட்டு தாமதம் செய்ததால், அவர்களின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதே உத்தியை இலங்கை அரசு தொடர்ந்து கடைபிடித்தால், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ஒருபுறம் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல், இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல் என இருமுனைத் தாக்குதலை இலங்கை நடத்தி வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களையும், புதுச்சேரி காரைக்காலையும் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளூர் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்து விடாது. தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

.

Tags: இரககமறறகணடனமகதசயயபபடடதசயலபரமனவரகளரமதஸரமஸவரம
Previous Post

குருபூஜைக்கு வந்த இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Next Post

எஸ்.ஐ. மீது மோதிவிட்டு சென்ற காரில் கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எஸ்.ஐ. மீது மோதிவிட்டு சென்ற காரில் கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

எஸ்.ஐ. மீது மோதிவிட்டு சென்ற காரில் கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது என்னவோ புதியது என்பது போல் பாமக ராமதாஸ் பேட்டி கொடுத்துள்ளார் இதற்கு முன்பு பலமுறை தாக்கப்பட்டுள்ளனர் இது அனைவருக்கும் தெரிந்தது ராமதாஸ் அடிக்கடி இது போன்று ஏதாவது ஒரு பேட்டி கொடுத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In