Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னையில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 20 பேர் கைது; 54 டிக்கெட்டுகள், ரூ.11,000 பறிமுதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சென்னையில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 20 பேர் கைது; 54 டிக்கெட்டுகள், ரூ.11,000 பறிமுதல்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னையில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். 54 டிக்கெட் மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (23.05.2023) சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

அதன்பேரில், டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் தீவிரமாக கண்காணித்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 22.05.2023 அன்று 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 32 டிக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.5,300/- பறிமுதல் செய்யப்பட்டது

தொடர்ந்து டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் நேற்று (23.05.2023) தீவிரமாக கண்காணித்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக, 9 வழக்குகள் பதிவு செய்து 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, 22 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.6,000/- பறிமுதல் செய்தனர்.

2 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்து, 20 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 54 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.11,300/- பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட மொத்தம் 20 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: ஐபஎலகதகளளசசநதயலசனனயலடககடடககடடகளபரபறமதலர.11000வறற
Previous Post

“செங்கோல் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை தேசிய அரங்கில் மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி” – அண்ணாமலை

Next Post

மீண்டும் தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு! – அமைச்சர் விளக்கமும் பின்னணியும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீண்டும் தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு! - அமைச்சர் விளக்கமும் பின்னணியும்! | Opening of Kilambakkam bus stand postponed again

மீண்டும் தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு! - அமைச்சர் விளக்கமும் பின்னணியும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In