Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி | major explosion at a firecracker godown in vellore – a woman dies from severe burns – another person is in critical condition

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி | major explosion at a firecracker godown in vellore – a woman dies from severe burns – another person is in critical condition
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அப்புக்கல் சாலையில் தனியார் திருமண மண்டபத்துக்கு பின்புறமாக `ஸ்ரீ சப்தகிரி’ என்ற பெயரில் பட்டாசு உற்பத்தி குடோன் அமைந்திருக்கிறது. இன்று காலை 10:30 மணியளவில் 2 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 8 பேர் குடோனில் வேலை செய்துகொண்டிருந்தனர். மழை பெய்துகொண்டிருப்பதால் `வெடிபொருள்கள் எளிதில் தீப்பற்றாது’ என்று அலட்சியமாக நினைத்தபடி, பட்டாசு மருந்துகளை தரையில் கொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி (வயது 41) மற்றும் சங்கீதா (வயது 32) ஆகிய இருவரும் குடோனில் சிக்கிக் கொண்டனர்.

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

இதில், காயத்ரி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சங்கீதா 90 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் `மிகக் கவலைக்கிடம்’ என்று தெரிவித்திருக்கின்றனர்.

தகவலறிந்ததும், ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சியடித்து பலியான காயத்ரியின் உடலை மீட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், எஸ்.பி சிவராமன், அணைக்கட்டு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ த.வேலழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

`மழைக் காரணமாக ஈரப்பதம் இருப்பதால், வெடி மருந்துகளை தரையில் கொட்டியிருக்கின்றனர். தரையில் வெப்பம் அதிகரித்து தீப்பற்றியதால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்று முதற்கட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன. விபத்து தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துயரச் சம்பவம், வேலூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.



.

Previous Post

மைசூரு தசரா.. வானில் மயில் உருவம்.. 3000க்கும் மேற்பட்ட ட்ரோன் மூலம் சாதனை.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

EXCLUSIVE | இந்தியாவில் குறிப்பாக மும்பைக்கு வந்தது ஏன்? மார்கோ ரூபியோ விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
EXCLUSIVE | இந்தியாவில் குறிப்பாக மும்பைக்கு வந்தது ஏன்? மார்கோ ரூபியோ விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

EXCLUSIVE | இந்தியாவில் குறிப்பாக மும்பைக்கு வந்தது ஏன்? மார்கோ ரூபியோ விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In