Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

EXCLUSIVE | இந்தியாவில் குறிப்பாக மும்பைக்கு வந்தது ஏன்? மார்கோ ரூபியோ விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
EXCLUSIVE | இந்தியாவில் குறிப்பாக மும்பைக்கு வந்தது ஏன்? மார்கோ ரூபியோ விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 12:29 PM IST

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தனது சமீபத்திய இந்தியப் பயணத்தின்போது புதுடெல்லிக்குச் செல்லாமல் மும்பை மற்றும் ஜாம்நகரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

Marco Rubio's India visit
Marco Rubio’s India visit

நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு நேற்றைய தினம் பிரத்யேக நேர்காணல் அளித்திருந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ. அப்போது பேசிய அவர், தனது பயணத்தின் நோக்கமே இந்தியாவைப் பற்றிய விரிவான புரிதலைப் பெறுவதும், இந்தியா–அமெரிக்க வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் பிராந்தியங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதும்தான் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் நியூஸ் 18 உடன் பேசுகையில், “இந்தியா மிகப் பெரிய நாடு; உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இந்தியா இருக்கிறது. எங்கள் நாட்டை (அமெரிக்காவை) பற்றி அறிந்துகொள்ளவும், அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் வாஷிங்டனுக்கு மட்டும் சென்றால் போதாது. அதுபோலவே, இந்தியாவையும் புரிந்துகொள்ள ஒரு இடத்திற்கு மட்டும் வந்தால் போதாது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். அப்படி இந்தியா முழுக்க பயணப்படவே நான் விரும்புகிறேன். இருப்பினும் நான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் இந்த காலத்தில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் போகலாம். ஆனால் இவ்வளவு பெரிய நாட்டைப் பற்றி முடிந்தவரை அதிகம் தெரிந்துகொள்வது முக்கியம். விரைவில் செல்வேன் என நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ரஷ்ய டீசலை அமெரிக்கா கொள்முதல் செய்வது ஏன்? மார்கோ ரூபியோ பிரத்யேக பேட்டி

தற்போதைக்கு தனது இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக மார்கோ ரூபியோ, தலைநகர் டெல்லிக்கு செல்லாமல் மும்பைக்குதான் வந்திருக்கிறார். பொதுவாக இந்தியா வரும் அயல்நாட்டு தலைவர்கள் டெல்லிக்கு செல்வதற்கே முக்கியத்துவம் கொடுப்பர். ஆனால் ரூபியோ மும்பையை தேர்வு செய்துள்ளார். அது ஏன் என விளக்கிய ரூபியோ, “இந்தியாவின் ‘நிதி இதயமும் ஆன்மாவும்’ மும்பைதான். அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களும், எதிர்காலத்தில் அதிக வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்களும் இங்குதான் (மும்பையில்தான்) அதிகமாக உள்ளன.

அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

மும்பைதான் இந்திய நாட்டின் நிதி நடவடிக்கைகளுக்கு உயிர்நாடியாக விளங்குகிறது. பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் இந்தியா–அமெரிக்க வர்த்தக உறவுகளை வளர்ப்பதிலும் மும்பை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் மும்பை வருவதுதான் சரியான முடிவாக இருக்குமென நான் நினைத்தேன். இந்தியாவுடனான உறவுகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா இந்தியாவுடனான தனது தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்” என்றார்.

மேலும் தன் பேட்டியில் அவர் மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், வர்த்தகம், முதலீடு மற்றும் குவாட் (Quad) அமைப்பின் மூலம் ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகியவை இரு நாடுகளின் முக்கிய ஈடுபாட்டுப் பகுதிகளாக உள்ளன. அதனொரு பகுதியாகவே ரூபியோ தற்போது இந்தியா வந்துள்ளார்.



.

Previous Post

வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி | major explosion at a firecracker godown in vellore – a woman dies from severe burns – another person is in critical condition

Next Post

வால்பாறை: கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்… சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வால்பாறை: கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்… சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

வால்பாறை: கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்... சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In