Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை – கொந்தளிக்கும் சி.பி.எம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை – கொந்தளிக்கும் சி.பி.எம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கொச்சி சி.எம்.ஆர்.எல் என்ற தனியார் தாதுமணல் கம்பெனியிடம் இருந்து மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் ​முதல்வராக இருந்த சமயத்தில் பினராயி விஜயன் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அதை ஹவாலா பணமாக மருமகனும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாஸ் மூலம் துபாய்க்கு அனுப்பியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. விசாரணை அறிக்கைகளை கேரள போலீஸ் டி.ஜி.பி-க்கு கடந்த செப்டம்பர் மாதமே அனுப்பிய நிலையில், அம்மாநில காங்கிரஸ் அரசு விசாரணை கமிட்டி மட்டுமே அமைத்தது. இதற்கிடையே பினராயி விஜயன் மீது வழக்குப்பதிய வேண்டும் என கே.எம்.ஷாஜஹான் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரித்துவிட்டதால் நேரடியாக வழக்குப்பதிய கேரள போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு 11.10.2026 அன்று பினராயி விஜயனை குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதலாவதாக சேர்த்து ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்துள்ளது. இரண்டாவது பெயராக அவரது மகள் வீணாவின் பெயர் உள்ளது. விஜிலென்ஸ் பதிந்த மற்றொரு வழக்கில் பினராயி விஜயனின் மருமகன் முகம்மது ரியாஸ் மீதும், மகள் வீணா மீதும் குற்றம் சாட்டப்படுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை நடத்தும் உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக பினராயி விஜயன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து 23.10.2026 அன்று காலை 11 மணிக்கு கொச்சியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து பினராயி விஜயன் கைதுசெய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ​இதற்கிடையே, இவ்வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக ஜாமீன் கோரி பினராயி விஜயன் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஆனாவூர் நாகப்பன்

இதுபற்றி சி.பி.எம் மூத்த நிர்வாகியும், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவருமான ஆனாவூர் நாகப்பனிடம் பேசினோம், “​மத்திய பா.ஜ.க அரசு, தனக்கு எதிராக நிற்கும் அரசியல் சக்திகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை தொடரும் வழக்குகளில் அரை சதவீத வழக்குகளில் கூட இதுவரை எவருக்கும் தண்டனை பெற்றுத் தரப்படவில்லை. பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்காமல் தள்ளுபடியாகி விடுகின்றன. உறுதியான ஆதாரங்களுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், பின்னர் நெருக்கடி கொடுத்து அவர்களை பா.ஜ.க-வில் இணையவைப்பதே இவர்களின் உத்தியாக உள்ளது. திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, காங்கிரஸைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டின் கனிமொழி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா போன்றவர்கள் மீது எவ்வித ஆதாரமுமின்றி வழக்குகள் போடப்பட்டன.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

தனியார் தாதுமணல் நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு வழங்கிய 182 கோடி ரூபாய்க்கு வரி விலக்கு கோரியபோது, மத்திய அரசின் இடைக்காலத் தீர்வு வாரியம் அதனை ஊழல் எனக் கூறி நிராகரித்தது. ​அந்த ரூ.182 கோடியில் பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை ரூ.2.71 கோடி மட்டுமே. இத்தொகை கணினி மற்றும் மென்பொருள் சேவைக்கான எழுத்துப்பூர்வ உத்தரவாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவே பெறப்பட்டது. அதற்கான அரசு வரிகளும் முறையாகச் செலுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ.179 கோடிக்கும் அதிகமான தொகை, எவ்வித ஆவணங்களும் இன்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இன்றைய அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தொழில் துறை அமைச்சர் பி. கே. குஞ்ஞாலிக்குட்டி மற்றும் மலையாள ஊடக நிறுவனங்கள் பெற்றுள்ளன. எவ்வித ஆவணமும் இன்றி ரொக்கமாகப் பெறப்பட்ட ரூ.179 கோடி குறித்து விசாரணை நடத்தாத அமலாக்கத்துறை, ரூ.2.71 கோடியை மட்டும் வழக்காக மாற்றி பழி சுமத்த முயல்வது விசித்திரமானது.

ஆனாவூர் நாகப்பன்

கேரளாவில் அமலாக்கத்துறை நேரடியாகத் தலையிடுவதற்கு ஒரு முதல் தகவல் அறிக்கை தேவை என்பதற்காகவே, விஜிலென்ஸ் துறையில் பதியப்பட்ட புகாரை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அமலாக்கத்துறை உள்ளே நுழைந்துள்ளது. 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒருவர் மீது ஊழல் கறை பூசி, பொதுமக்களிடையே சி.பி.எம் கட்சியை பலவீனப்படுத்தவே பா.ஜ.க இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.   சி.பி.எம் ஒருபோதும் பா.ஜ.க-வுற்கு அடிபணியாது. அமலாக்கத்துறையின் இந்த அச்சுறுத்தலை நீதிமன்றங்கள் மூலமாகச் சட்டரீதியாகவும், மக்களிடையே உண்மைகளைக் கொண்டு சென்று அரசியல் ரீதியாகவும் உறுதியுடன் எதிர்கொள்வோம்” என்றார்.



.

Previous Post

“அன்புச் சகோதரர் விஜய்-க்கு பணிவான வேண்டுகோள்" – லெஜெண்ட் சரவணன்

Next Post

போதைப்பொருள்: “தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி| Udhayanidhi Stalin has commented on the involvement of a TVK functionary in drug trafficking.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போதைப்பொருள்: “தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி| Udhayanidhi Stalin has commented on the involvement of a TVK functionary in drug trafficking.

போதைப்பொருள்: ``தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?" - உதயநிதி ஸ்டாலின் கேள்வி| Udhayanidhi Stalin has commented on the involvement of a TVK functionary in drug trafficking.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In