Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அன்புச் சகோதரர் விஜய்-க்கு பணிவான வேண்டுகோள்" – லெஜெண்ட் சரவணன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
“அன்புச் சகோதரர் விஜய்-க்கு பணிவான வேண்டுகோள்" – லெஜெண்ட் சரவணன்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆயுதப் பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் லெஜெண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுதப் பூஜை விழாவை கொண்டாடினார். அதைத் தொடர்ந்து, உரையாற்றினார், அப்போது, “இந்தத் தருணத்தில், மறைந்த இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு இனிமையான இசையமைப்பாளர் மற்றும் ‘இன்னிசைத் தென்றல்’ மட்டுமல்லாமல், அனைவரிடமும் இனிமையாகவும் அன்பாகவும் பழகக்கூடிய பண்பாளர். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் தேவா

சில நாட்களுக்கு முன்பு இந்த விழாவில் பங்கேற்பதற்கு முன், நான் சில ஆட்டோ நண்பர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் கூறிய விஷயங்கள் எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தன.
முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 15 சவாரிகள் வரை சென்றுகொண்டிருந்ததாகவும், ஆனால் இன்றைய காலகட்டத்தில் 5 சவாரிகள் மட்டுமே செய்ய முடிகிறது என்றும் வருத்தத்துடன் கூறினார்கள். அந்த அளவுக்கு சவாரிகள் குறைந்துவிட்டதால், அவர்களால் ஆட்டோவிற்கான தவணையை (Due) செலுத்த முடியவில்லையென்றும், குடும்பத்தை நடத்துவதற்குப் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்கள்.

கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழக அரசுக்குத் தங்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகப் பல்வேறு கோரிக்கைகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதுவரை அவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த நேரத்தில் நமது தமிழக முதல்வர் அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். ஆட்டோ ஓட்டுநர் சகோதரர்கள் மற்றும் பல பெண் ஓட்டுநர்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் நினைத்தால் ஒரே வினாடியில் அதை நிறைவேற்றி, அவர்களின் வாழ்க்கையைச் செழிக்க வைக்க முடியும்.

இன்று இந்தியாவிலேயே இருசக்கர வாகனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது நமது தமிழகத்தில்தான். பெரும்பாலான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலேயே பயணிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, இன்று ஆட்டோ ஓட்டுநர்களை நம்பியிருப்பவர்கள் குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினர் மற்றும் முதியோர்கள்தான். எனவே, ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளைத் தன் குடும்பத்தில் ஒருவராக, ஒரு சகோதரனாக, ஒரு நண்பனாக அல்லது பெரியவர்களுக்கு ஒரு மகனாகப் பாவித்து அன்போடும் பரிவோடும் சேவை செய்ய வேண்டும்.

அவர்களுக்கு உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் (Comfortable) அமைந்துவிட்டால், அவர்கள் வேறு எந்தப் போக்குவரத்து வாகனத்தையும் நாட மாட்டார்கள். “நான் ஆட்டோவிலேயே செல்கிறேன், எனக்கு இதுதான் வசதியாக இருக்கிறது” என்ற நம்பிக்கையை அவர்களுக்கு நீங்கள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் தொழிலும் வளரும்.
அரசு உங்களுக்கு உதவிகள் செய்தாலும், உங்களுடைய அணுகுமுறையும் மிக முக்கியம். அதேபோல, டூவீலர் டாக்ஸி/கேப் போன்றவற்றை ஒழித்துக் கொடுத்தாலே ஆட்டோ தொழிலாளர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வாழ்வாதாரம் என்பது தனிநபர் சார்ந்ததல்ல; அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் என ஒரு குடும்பத்தையே வாழ வைக்கும் சக்தி கொண்டது.

ஆட்டோ
ஆட்டோ

ஆட்டோ ஓட்டுநர்கள் ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலும் 20 முதல் 30 பேர் வரை நிற்கிறீர்கள். உங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்களோ, தவறுகளோ அல்லது கலவரங்களோ நடந்தால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துக் குற்றங்களைக் குறைக்க உதவலாம். அதேபோல, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் இறங்கிப் போக்குவரத்தைச் சீர்செய்யவும், சட்ட ஒழுங்கைப் பராமரிக்கக் காவல் துறைக்கு உதவவும் செய்ய வேண்டும். நாம் உழைப்பதுடன் மட்டுமல்லாமல், மக்களுக்கான சேவையிலும் ஈடுபட வேண்டும். நீங்கள் எப்போதும் அனைத்து இடங்களிலும் இருப்பதால், உங்களால் எளிதாகச் சமூகத்தைச் இணைக்க முடியும்.

மேலும், இந்த ஆண்டில் அதிக மழை பெய்யப்போவதாகக் கூறுகிறார்கள். அரசு சொல்லும் பாதுகாப்பு அறிவுரைகளைக் கவனமாகக் கேட்டு நடப்போம். எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ இல்லாமல் இந்த மழைக்காலத்தை அனைவரும் இணைந்து எதிர்கொள்வோம்.
உங்கள் வாழ்க்கை மேம்படவும், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் தமிழக அரசும் மக்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘வெற்றிப் பயணத்தால் மூன்றில் ஒரு பங்கு வருமானம் போச்சு!’ – ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

ஆயுத பூஜை: “உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும்” – முதல்வர் விஜய் வாழ்த்து| Ayudha Puja: “Celebrating the value of hard work and the nobility of one’s profession” – CM Vijay’s wishes

Next Post

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை – கொந்தளிக்கும் சி.பி.எம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை – கொந்தளிக்கும் சி.பி.எம்!

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை - கொந்தளிக்கும் சி.பி.எம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In