Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர் மிரட்டல்… லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2026
in அரசியல் செய்திகள்
0
பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர் மிரட்டல்… லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சமீப காலமாக மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸரை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் அமெரிக்காவில் பதுங்கி இருந்தார். இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் மும்பை வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் இருந்து இந்த கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நடிகர் துஷார் கபூர், ரன்வீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மும்பை போலீஸார் ஹரி பாக்ஸரை தேடி வந்தனர்.

அதோடு கடந்த மாதம் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தேவையான ஆயுத உதவிகளை செய்ததாகவும் ஹரி பாக்ஸர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.

இந்நிலையில் டெல்லி மற்றும் ஹரியானா போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹரி பாக்ஸர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சி.பி.ஐ அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரான ஹரி பாக்ஸர் வெளிநாட்டில் இருந்து கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். ஜெய்ப்பூரில் தங்கி இருந்தபோது பாக்ஸிங் கற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனது பெயரை ஹரி பாக்ஸர் என்று மாற்றிக்கொண்டார். ஆரம்பத்தில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது ராஜஸ்தான் உட்பட நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஹரி பாக்ஸர் இந்தியாவில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு சென்றார். ஹரி பாக்ஸரின் கைது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கைது மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

Dr. Krishnasamy has warned that if Kamal Hasan makes a film titled Sandiyar he will have to flee TamilNadu – ‘சண்டியர் என படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே ஓட வேண்டியிருக்கும்’ – டாக்டர் கிருஷ்ணசாமி!

Next Post

ஓபிசி கிரீமி லேயர் கணக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓபிசி கிரீமி லேயர் கணக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? | India News (இந்தியா செய்திகள்)

ஓபிசி கிரீமி லேயர் கணக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In