கோவை குனியமுத்தூரில் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் புதிதாக எடுக்கும் படத்திற்கு சண்டியர் என பெயர் சூட்டி இருக்கின்றார். 2003ல் இதே பெயரை வைத்த போது இரு சமூகங்களிடம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்த தலைப்பை கைவிட கூறி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவுரையை ஏற்று சண்டியர் படப்பெயரை கமலஹாசன் கைவிட்டார். இப்போது
23 வருடங்கள் கழித்து சண்டியர் என அதே பெயரில் படம் எடுப்பதாக கமலஹாசன் சொல்லி இருக்கிறார். பிறந்தநாளில் நல்ல செய்திகளை சொல்லுவார்கள், ஆனால் கமல்ஹாசன் பிறந்த நாளிலேயே, பழிக்கு பழி எனஆரம்பித்து இருக்கிறார். அன்று கமல் சாதாரண நடிகர், இன்று நாடாளுமன்ற உறுப்பினர் , அரசியல் கட்சி தலைவர், அவருக்கு இன்று நிறைய பொறுப்புகள் இருக்கின்றது. சாதிய மோதலை தூண்டக் கூடிய வகையில் அமைந்த பெயர் அது. இரத்தத்தின் கடனை ரத்தத்தால் தீர்ப்போம் என கூறி இருக்கின்றார். உலகின் அனைத்து தலைவர்களும், ஞானிகளும் சொன்ன கருத்துக்கு எதிராக இந்த பெயர் வைத்துள்ளார். அந்த பெயரில் தமிழகத்தில் அவர் படத்தை எடுக்கவும் முடியாது, படத்தை ஒட்டவும் முடியாது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட பெயரை அனுமதித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தவறு. முதல்வர் விஜய் கமலஹாசனை அழைத்து ஜெயலலிதாவை போல உரிய அறிவுரை சொல்ல வேண்டும்.

