Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் அதிபர் வீரமணி கைதாகி சிறையில் இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் உள்ளிட்டோரும் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீரமணி உள்ளிட்டோர் மீதான குற்றங்கள் குறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வீரமணியின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகரான பிரகாஷ் என்பவருக்கு, வீரமணி, 100 கோடி ரூபாய் அனுப்பி இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஜெம் வீரமணி வழக்கு

வீரமணியின் நெருங்கிய நட்பு வட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகர் பிரகாஷ் இருந்துள்ளார். இவருக்கு, வீரமணியின் குற்றங்கள் குறித்து தெரிந்திருக்கக்கூடும் என்கிறார்கள். மேலும், வீரமணி மீது சட்ட நடவடிக்கை பாயாமல் இருக்க, பிரகாஷ் இடைத்தரகர் போல செயல்பட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வீரமணி, சிறுமியருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைக் காட்டி, அவரது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை, தன் குடும்பத்தினருக்கு தர வேண்டும் என சாந்தி மிரட்டி உள்ளார். இது பற்றி பிரகாஷிடம், வீரமணி மகள் தெரிவித்துள்ளார்.

நாதக கார்த்திகா கைது: “நயினாருக்கு எதிராகக் கைது நடவடிக்கை எடுத்தார்களா?” – கனிமொழி கேள்வி

பிரச்னை எல்லை மீறியதால் வீரமணி சென்னை மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள இரண்டு சொத்துக்களை விற்று, பிரகாஷுக்கு, 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதில், 24 கோடி ரூபாயை தன் வங்கிக் கணக்கில் பிரகாஷ் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பிரகாஷ் தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கிறார். அவரைப் பிடிக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஜெம் வீரமணி
ஜெம் வீரமணி

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பிரகாஷைக் கைதுசெய்ய, சென்னை காவல்துறை ‘புளூ கார்னர் நோட்டீஸ்’ வெளியிட உள்ளது. அவர் யுனைடெட் கிங்டமில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறை வட்டார தகவல்களின்படி, விசாரணையாளர்கள் இன்டர்போல் மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நவ.12-ம் தேதி தேர்தல் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நவம்பர் 3-க்குப் பிறகு அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடையுமா?|After November 3, Will US-Iran Tensions Escalate?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹார்முஸ் மூடல்: கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு யார் காரணம்? ஈரான் பதில் | ‘Who Closed Hormuz?’ Iran Fires Back at the US

நவம்பர் 3-க்குப் பிறகு அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரமடையுமா?|After November 3, Will US-Iran Tensions Escalate?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In