Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 10:22 PM IST

நீண்ட காலத்திற்கு ஒரு வர்த்தக ஒப்பந்தம் நிலைத்திருக்க வேண்டுமானால், அது இரு நாடுகளுக்குமே சாதகமானதாக இருக்க வேண்டும்.

ராகுல் ஜோஷி - மார்க்கோ ரூபியோ
ராகுல் ஜோஷி – மார்க்கோ ரூபியோ

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தப் (Trade Deal) பேச்சுவார்த்தைகள் இறுதித் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்க்கோ ரூபியோ (Marco Rubio) நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்தியா தனது நாட்டின் சொந்த நலன்களுக்காகவும் நன்மைக்காகவும் போராடுவதையும் தற்காத்துக் கொள்வதையும் அமெரிக்கா முழுமையாகப் புரிந்துகொள்கிறது என்றும், அதைத் தங்கள் நாடு முற்றிலும் மதிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்தத் தேசிய நலன்கள் மற்றும் தேவைகள் இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் வர்த்தகக் கொள்கையும் அமைகின்றன என்று கூறிய மார்க்கோ ரூபியோ, இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கழும் எந்தவொரு நாடும் தனது நலனுக்காகப் போராடுவதை இயல்பான ஒன்றாகவே பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ நியூஸ்18 ன்க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இரு நாடுகளும் சிறந்த நண்பர்களாகவும், வலுவான கூட்டாளிகளாகவும், பொதுவான கொள்கைகளைப் பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருக்கும்போது, அத்தகைய நட்புறவே இரு தரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்ப்பதற்கும், இரு தரப்பிற்கும் பரஸ்பர நன்மை அளிக்கும் ஒரு நிலையை எட்டுவதற்கும் பெரிதும் உதவுகிறது.

நீண்ட காலத்திற்கு ஒரு வர்த்தக ஒப்பந்தம் நிலைத்திருக்க வேண்டுமானால், அது இரு நாடுகளுக்குமே சாதகமானதாக இருக்க வேண்டும்.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் அல்ல, மாறாக ஓரிரு வாரங்களிலேயே இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும்.

ஒப்பந்தத்திற்கான பெரும்பாலான முக்கியப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது சில தொழில் நுட்பக் காரணங்கள் மற்றும் ஆவண வேலைகள் (Technical details) மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்தத் தொழில்நுட்ப விவரங்கள் முடிவுக்கு வந்ததும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield – ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

'பல்லவன் இல்லத்துக்கு மாற்றப்படுகிறதா தலைமைச் செயலகம்?' – அதிகாரிகள் சொல்வதென்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'பல்லவன் இல்லத்துக்கு மாற்றப்படுகிறதா தலைமைச் செயலகம்?' – அதிகாரிகள் சொல்வதென்ன?

'பல்லவன் இல்லத்துக்கு மாற்றப்படுகிறதா தலைமைச் செயலகம்?' - அதிகாரிகள் சொல்வதென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In