சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்குவது போலக் கனவு இல்லத் திட்டத்தில் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினுக்குச் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற தமிழ்நாடு எழுத்தாளர் குழு கடிதம் எழுதியிருக்கிறது.
அதில், “தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் திராவிட மாடல் நல்லாட்சியில் முன்மாதிரித் திட்டமாக அறிமுகப்படுத்திய, “சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம்’ என்னும் மகத்தான திட்டத்தால் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் பலரும், தங்கள் விருப்பம்போல வசிப்பதற்கான வாழ்விடத்தைப் பெற்றுப் பயனடைந்து வருவது நாடறிந்தது.
