Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவின் பெரிய நகரங்களில் நிகழும் 78% சாலை விபத்துகள்… காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 9, 2024
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவின் பெரிய நகரங்களில் நிகழும் 78% சாலை விபத்துகள்… காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலகிலேயே அதிக சாலை விபத்துகள் மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. Acko-வின் ஆக்சிடென்ட் இன்டெக்ஸ் 2024 அறிக்கையின்படி, நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்கள் அனைத்தும் 78% பங்கு வகிப்பதோடு, ஹைதராபாத் மற்றும் டெல்லி என்சிஆர் ஆகியவை அதிக விபத்துகள் பதிவாகும் நகரங்களாக உள்ளன.

அறிக்கையின்படி, ஹைதராபாத் மற்றும் டெல்லி என்சிஆர் ஆகியவை விபத்து அட்டவணையில் முதலிடம் வகிக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக புனே மற்றும் பெங்களூரு நகரங்கள் ஆகியவை முறையே 15.9% மற்றும் 14.2% விபத்து நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. இந்த நகரங்களில் குறிப்பிட்ட விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பெங்களூருவின் பொம்மனஹள்ளி அடங்கும். இங்கு அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து நொய்டா, புனேவில் மருஞ்சி மற்றும் மும்பையின் மீரா சாலை பகுதிகள் உள்ளன.

விளம்பரம்

அதேபோல குறிப்பாக இந்த விபத்துகளில் சிக்கிய மிகவும் பொதுவான வாகனங்களை கூட இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் முதலிடத்தில் இருப்பது ஹூண்டாய் ஐ10 ஆகும், இதனை தொடர்ந்து மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற சில பிரபலமான கார் மாடல்கள் உள்ளன. இந்த பட்டியலில் இருக்கும் மேலும் இரண்டு மாடல்கள் ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி சுசுகி டிசையர் ஆகும்.

இந்த அறிக்கை பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ACKO ஜெனரல் இன்சூரன்ஸ், ஆட்டோ இன்சூரன்ஸ் துணைத் தலைவர் மயங்க் குப்தா, விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிவதன் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கொள்கை வகுப்பவர்கள் மற்றும் குறிப்பிட்ட நகர நிர்வாகிகளுக்கு உதவுவதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?

சாலை விபத்துகளுக்கான மிகவும் பொதுவான காரணங்கள்…

சாலை விபத்துகளுக்கான வழக்கமான காரணிகளை தவிர பிற காரணங்களை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணம் தெருவிலங்குகள் தான் என்பது அதிர்ச்சியடைய வைக்கும் தகவலாக உள்ளது. இதுபோன்ற 62 சதவீத சாலை விபத்துகளுக்கு தெரு நாய்களே காரணமாக உள்ளன. இதனை தொடர்ந்து 29 சதவீத விபத்துகளுக்கு பசுக்களும், 4 சதவீத விபத்துக்களுக்கு எருமை மாடுகள் காரணமாக உள்ளன.

விளம்பரம்

விலங்குகள் ஒருபக்கம் இருக்க இந்திய சாலைகளில் பள்ளங்கள் இன்னும் பெரிய ஆபத்தாக உள்ளன. இந்த பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. 44.8 சதவீத பள்ளங்கள் தொடர்பான விபத்துகள் இந்த நகரத்தில் நிகழ்கின்றன. டெல்லி மற்றும் மும்பை முறையே 13.3 சதவீதம் மற்றும் 12.3 சதவீதத்துடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

வெந்நீர் VS குளிர்ந்த நீர்… குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்.?


வெந்நீர் VS குளிர்ந்த நீர்… குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்.?

இந்த புள்ளி விவரங்கள் சிறந்த சாலை பாதுகாப்பிற்காக நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தை வெளிப்படுத்தி உள்ளன. இயற்கை சீற்றங்களால் வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில், மைச்சாங் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 22 சதவீதம் இன்சூரன்ஸ் கோரிக்கைகள் வந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



.

Previous Post

நம் எல்லோருக்கும் பிடிச்ச சிக்கன் 65 க்கு உலக அங்கீகாரம் – உலகிலேயே 3 ஆவது இடம்! | Indian chicken 65 gained international recognition by grabbing third spot in atlas best fried chicken dishes

Next Post

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் பங்கு விலையில் ஏன் இன்று கவனம் செலுத்தப்படுகிறது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் பங்கு விலையில் ஏன் இன்று கவனம் செலுத்தப்படுகிறது?

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் பங்கு விலையில் ஏன் இன்று கவனம் செலுத்தப்படுகிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In