Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”சின்னம் உங்களுக்கு ‘லக்கி’ இல்லை; மாற்றிவிடுங்கள்”: சீமான் கட்சிக்கு நீதிபதி அறிவுரை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
”சின்னம் உங்களுக்கு ‘லக்கி’ இல்லை; மாற்றிவிடுங்கள்”: சீமான் கட்சிக்கு நீதிபதி அறிவுரை
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: நாம் தமிழர் கட்சி சார்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், ‘சின்னம் உங்களுக்கு லக்கி இல்லை போல தெரிகிறது, அதனை மாற்றிவிடுங்கள்’ என தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வரவுள்ள லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்திலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (மார்ச் 1) டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி மன்மோகன், ”சின்னம் உங்களுக்கு ‘லக்கி’ இல்லை போல தெரிகிறது; எனவே அதனை மாற்றிவிடுங்கள். நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியே அல்ல; பின்னர் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையம் தரப்பில், ”விதிமுறைகள் அடிப்படையில் மட்டுமே சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன” என வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மன்மோகன், ”தேர்தல் ஆணையத்தின் பதில், விதிகள் அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவகாசம் வழங்கினாலும், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

நாம் தமிழர் கட்சி தரப்பில், ”கரும்பு விவசாயி சின்னம் வழங்காதது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என வாதிடப்பட்டது. ”6 சதவீத ஓட்டுகள் என்பது பெரும் எண்ணிக்கை தான். சின்னம் இல்லையென்றால் சில நேரங்களில் அவர்களின் எதிராளிகளுக்கு சாதகமாகிவிடும்” எனக் கூறி எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

.

Previous Post

பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடையில்லை

Next Post

மோடியை பிரதமராக ஏற்கக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், பாஜக கூட்டணியில் ஏற்க தயார் – ராம சீனிவாசன் பேட்டி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடியை பிரதமராக ஏற்கக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், பாஜக கூட்டணியில் ஏற்க தயார் – ராம சீனிவாசன் பேட்டி.

மோடியை பிரதமராக ஏற்கக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், பாஜக கூட்டணியில் ஏற்க தயார் - ராம சீனிவாசன் பேட்டி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In