Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகளிர் உரிமைத் தொகை – புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 8, 2024
in Default
0
மகளிர் உரிமைத் தொகை – புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்..
28
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் பல்வேறு கட்டமாக பயனாளர்கள் அதிகரித்த போதும் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் மட்டுமே பயனாளர்களாக உள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை – நிபந்தனைகள் தளர்வு?

மகளிர் உரிமைத் தொகை - நிபந்தனைகள் தளர்வு?

சுமார் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனாளிகளாக இணைய முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு தேர்தலை முன்னிட்டாவது, நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வரும், புதிய பயனாளர்கள் இணைவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மக்கள் பிரதிநிதிகளிடம் புகார்!

மக்கள் பிரதிநிதிகளிடம் புகார்!

ஆனால் மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்களை சந்திக்கும் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் சூழ்ந்து மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களாக இணையமுடியவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் – பயனாளர்கள் இணைப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - பயனாளர்கள் இணைப்பு!

இந்த திட்டத்தை செயல்படுத்தும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு முன்னர் விண்ணப்பித்த ஒரு கோடியே 63 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை கட்டாயம் வழங்கப்படும். தேர்தல் முடிந்த பின்னர் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக பயனாளர்களைக் கொண்டதும், அதிக நிதியை கோருவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான்.

தங்கம் தென்னரசு கொடுத்த அப்டேட்!

தங்கம் தென்னரசு கொடுத்த அப்டேட்!

இரண்டரை ஆண்டுகள் தாமதமாக திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கும் நிதிப் பற்றாக்குறை தான் காரணமாக கூறப்பட்டது. இந்த சூழலில் தேர்தலுக்குப் பிறகு பயனாளர்கள் அதிகரிக்கப்படுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறாரே அது சாத்தியமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழாமல் இல்லை. ஆனால் சாத்தியம் தான் என்று கூறியுள்ளார் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

மகளிர் உரிமைத் தொகை கணக்கெடுப்பு!

மகளிர் உரிமைத் தொகை கணக்கெடுப்பு!

ராமநாதபுரத்தில் நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழி ஒன்றியம், பூலாங்கால், பரளச்சி, தொப்பலாக்கரை, ம.ரெட்டியாபட்டி, கல்லுாரணி, மற்றும் ஆலடிபட்டி ஆகிய பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர் . நவாஸ்கனியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். “மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்ததும் விடுபட்ட அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் கட்டாயம் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Previous Post

சிக்கலில் சஞ்சய் சிங்.. குஜராத் பல்கலைக்கழக அவதூறு வழக்கில் அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்!

Next Post

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்தடுத்து சிக்கல்.! அதிரடியாக வழக்கு பதிவு செய்த தேர்தல் அதிகாரி-காரணம் என்ன.?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நயினார் நாகேந்திரனுக்கு அடுத்தடுத்து சிக்கல்.! அதிரடியாக வழக்கு பதிவு செய்த தேர்தல் அதிகாரி-காரணம் என்ன.?

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்தடுத்து சிக்கல்.! அதிரடியாக வழக்கு பதிவு செய்த தேர்தல் அதிகாரி-காரணம் என்ன.?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In