Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிக்கலில் சஞ்சய் சிங்.. குஜராத் பல்கலைக்கழக அவதூறு வழக்கில் அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 8, 2024
in Default
0
சிக்கலில் சஞ்சய் சிங்.. குஜராத் பல்கலைக்கழக அவதூறு வழக்கில் அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்!
39
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், புது டெல்லி: டெல்லி மதுபான ஊழலில் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றொரு வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குஜராத் பல்கலைக்கழக அவதூறு வழக்கில் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த மனுவில் தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி விவகாரம்

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்த கருத்துக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் இந்த அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.சஞ்சய் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தர விட்டது. அதன்பிறகு கீழமை நீதிமன்றத்தின் சம்மனை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்த குஜராத் பல்கலைக்கழகம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி மற்றும் பட்டப்படிப்பு குறித்த கேள்விகளை எழுப்பிய போது குஜராத் பல்கலைக்கழகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்தனர். அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆம் ஆத்மி தலைவர்கள் மீது குஜராத் பல்கலைக்கழகம் கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்தது. 

நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய கீழமை நீதிமன்றம்

இந்த வழக்கில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு எதிராக குஜராத் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பி அவரை ஆஜராக அழைத்தது. இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தின் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் மேல்முறையீடு செய்திருந்தார். சஞ்சய் சிங்கிற்கு நிவாரணம் வழங்காத குஜராத் உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் சம்மனை உறுதி செய்தது.

சஞ்சய் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்காததால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆம் ஆத்மி எம்பி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ரெபேக்கா ஜான், “குஜராத் பல்கலைக்கழகம் தொடர்பாக சஞ்சய் சிங் கூறியதில் அவதூறு எதுவும் இல்லை எனக்கூறினார். இது குறித்து, கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் போது, ​​இந்த வாதங்களை அங்கே தெரிவிக்கலாம் எனக் கூறிய உச்ச நீதிமன்றம் சஞ்சய் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்தது.

ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்

2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருந்த அவர் ஏப்ரல் 3 (புதன்கிழமை) ஜாமீனில் வெளியே வந்தார்.

Previous Post

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா மனு.. நீதிமன்றத்தில் தாக்கல்..!

Next Post

மகளிர் உரிமைத் தொகை – புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகளிர் உரிமைத் தொகை – புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்..

மகளிர் உரிமைத் தொகை - புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In