Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அஸ்ஸாமில் சந்தேகத்தின் பேரில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அஸ்ஸாமில் சந்தேகத்தின் பேரில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 

பழங்குடியினப் பெண்ணை சந்தேகத்தின் பேரில் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது.

வடக்கு அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவரான ராம் கபி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை மாலை எனது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சிலர் வீட்டிற்குள் புகுந்து எனது மனைவியை மந்திரவாதி என்று கூறி அடித்தார்கள். அடிக்க வேண்டாம் என்று தடுத்த என்னையும் தாக்கினார்கள்.

இதையும் படிக்க | தெருநாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி!

எங்களை அடிப்பதைப் பார்த்து எங்களது குழந்தைகள் அழுததால், அவர்களைக் கூட்டிச்சென்று அருகில் வசிக்கும் எனது சகோதரனின் வீட்டில் இருக்கச்சொல்லி விட்டு திரும்பி வந்தபோது, ​​​​என் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.” என்று கூறினார்.

பின்னர் அப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அஸ்ஸாமின் சில பகுதிகளில் ‘மந்திரவாதிகள் வேட்டை’ என்ற பெயரில் கொலைகள் நடந்து வருகிறது. மாநில அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என ஏராளமானோர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும் கொலைகள் நிற்கவில்லை.

2017 ஆம் ஆண்டில், கௌஹாத்தி உயர் நீதிமன்றம் ஒரு நபரை மந்திரவாதி என்று முத்திரை குத்தி கொலை செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்று குறிப்பிட்டது.

இதையும் படிக்க | மல்யுத்த சம்மேளனம் தொடர்பாக பொய் செய்தியைப் பரப்புகிறது பாஜக: பிரியங்கா காந்தி

2018 ஆம் ஆண்டில், அஸ்ஸாம் மந்திரவாதிகள் வேட்டை (தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

ம.பி.,யில் 28 பேருக்கு அமைச்சர் பொறுப்பு: ஓ.பி.சி., பிரிவினருக்கு முக்கியத்துவம்

Next Post

பாக்., பொதுத்தேர்தலில் போட்டியிட ஹபீஸ் சையத் திட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாக்., பொதுத்தேர்தலில் போட்டியிட ஹபீஸ் சையத் திட்டம்

பாக்., பொதுத்தேர்தலில் போட்டியிட ஹபீஸ் சையத் திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In