வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
போபால்: முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான மத்திய பிரதேச அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலாகா குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. புதிய முதல்வராக ஓ.பி.சி வகுப்பை சேர்ந்த மோகன் யாதவ் (வயது 58) பதவியேற்றார். துணை முதல்வர்களாக ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா பதவியேற்றனர்.
இந்நிலையில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதுமான் சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், கைலாஷ் விஜய்வர்கியா, குவார் விஜய் ஷா, ராகேஷ் சிங், கரண் சிங் வர்மா, உதய் பிரதாப் சிங், விஸ்வாஸ் சாரங் உள்ளிட்ட 18 தலைவர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
10 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். ஓ.பி.சி பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அப்பிரிவை சேர்ந்த 11 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


