6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்புப் பயிற்சி முகாமை சென்னை எழும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னை, கோயமுத்தூர், தஞ்சாவூர், இராமநாதபுரம் ஆகிய நான்கு இடங்களிலும் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் ‘கணினியில்லா குறியீட்டுமுறை (Coding Without Computer), அடிப்படை நாடகம் (Basics Of Theatre), அடிப்படை ரோபோடிக்ஸ் (Foundational Robotics)’ போன்றவைகள் குறித்த பயிற்சிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
மாணவச் செல்வங்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ள துறை சார்ந்த வல்லுநர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்


