Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணை நடத்தபோவது டெல்லி தனிப்படை போலீசாரா அல்லது CBI -யா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணை நடத்தபோவது டெல்லி தனிப்படை போலீசாரா அல்லது CBI -யா?
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி சம்பவம் தொடர்பாக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளரிடம் டெல்லி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற முடிவு செய்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து ஏராளமானவர்கள் சபை நடவடிக்கையை பார்த்தனர்.

Parliament Security Breach: Delhi Police decided to question BJP Mysuru MP Pratap Simha who issued pass to accused

அப்போது திடீரென்று 2 பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவ்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகையை கக்கும் குப்பிகளை திறந்தனர். இதனால் லோக்சபா எம்பிக்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் எம்பிக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து பாதுாவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சாகர் சர்மா மற்றும் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பதும், அவர்கள் கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா வழங்கிய பாஸ் மூலம் லோக்சபா நடவடிக்கைகளை பார்க்க சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


அதேபோல் அன்றைய தினம் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் கலர் புகை குண்டு வைத்ததாக ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்துக்கு சூத்திரதாரியான லலித் ஜா 2 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை மொத்தம் 6 பேர் கைதான நிலையில் அவர்களிடம் டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் லோக்சபாவில் நுழைய சாகர் சர்மா மற்றும் மனோ ரஞ்சன் ஆகியோருக்கு பாஸ் வழங்கிய பிரதாப் சிம்ஹா எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணை நடத்த டெல்லி தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதாவது குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எந்த அடிப்படையில் பாஸ் வழங்கப்பட்டது? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்த முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த விசாரணை என்பது நடத்தப்பட உள்ளது.

பிரதாப் சிம்ஹா மட்டுமின்றி அவரது தனி உதவியாளரிடமும் டெல்லி தனிப்படை போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளனர். அதன்படி விரைவில் டெல்லி தனிப்படை போலீசார் டெல்லியில் உள்ள பிரதாப் சிம்ஹா எம்பியின் வீட்டுக்கு சென்று அவரிடம் கேள்விகள் கேட்டு அவரது பதில்களை வாக்குமூலம் போல் பதிவு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மணலி CPCL நிறுவனத்தில் தீ விபத்து..! விண்ணை முட்டும் கரும்புகை…சென்னையில் பரபரப்பு!

Next Post

நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசியதற்கு காரணம் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லாததே..! : ராகுல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசியதற்கு காரணம் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லாததே..! : ராகுல்.

நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசியதற்கு காரணம் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லாததே..! : ராகுல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In