புதுடில்லி: வேலையின்மையே நாட்டின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது என காங்.,எம்.பி ராகுல் கூறினார்.
லோக்சபா பார்வையாளர்கள் மாடத்திலிருந்து இரண்டு பேர் சபைக்குள் குதித்து, புகைகுண்டு வீசினர். இதற்கு பார்லிமென்டில் பாதுகாப்பு குறைப்பாடுகள் நிலவுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இது குறித்து ராகுல் கூறியதாவது: பார்லிமென்டில் பாதுகாப்பு மீறல் சம்பவம் ஏன் நடந்தது?. இதற்கு காரணம், பிரதமர் மோடியின் கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையின்மையே நாட்டின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் தங்களை போல் நடை பயணம் போக வேண்டியது தானே அதை விட்டுவிட்டு எதற்கு இந்த பாராளுமன்ற அவையில் புகை குண்டோ எந்த குண்டோ மொத்தத்தில் வெடிகுண்டு வீச வேண்டும்