Transformer வாங்க போடப்பட்ட 10 டெண்டர்களை அறப்போர் இயக்கம் ஆய்வு செய்துள்ளது. அனைத்திலும் அரசு நிர்ணயித்த விலையை விட மிக மிக அதிக விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்திலும் கூட்டுச்சதி செய்து ஒப்பந்ததாரர்கள் சந்தை விலைக்கு மிக மிக அதிகமாக ஒரே தொகையை கொடுத்துள்ளனர். இந்த கூட்டு சதியை நிறைவேற்ற ஏற்கனவே முறைகேடு புகாரில் சிக்கி வீட்டுக்கு அனுப்பப்பட்ட காசி என்பவர் திமுக ஆட்சியில் இந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் அலுவலகத்திற்கு செல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று வேலை பார்த்துள்ளார். இவ்வளவும் நடக்கும் போது இந்த மோசடி டெண்டர்களை ரத்து செய்யும் அதிகாரம் கொண்ட ராஜேஷ் லக்கானி ஒன்றும் செய்யாமல் உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் மீது FIR போட்டு விசாரணை நடத்த இதற்கு மேல் என்ன முகாந்திரம் வேண்டும்? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் எதிர்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன? ஏன் இந்த ஊழல் குறித்து எதிர்கட்சிகள் பேசாமல் இருக்கின்றன ? என்றும் அந்த தன்னார்வ அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.



