Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதிய முதல்வருக்கு அரசு இல்லம் எங்கே? ஒடிஸாவில் நவீன் பட்நாயக்கால் ஏற்பட்ட நிலை!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புதிய முதல்வருக்கு அரசு இல்லம் எங்கே? ஒடிஸாவில் நவீன் பட்நாயக்கால் ஏற்பட்ட நிலை!!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஒடிஸாவில் புதிதாக ஆட்சி அமைக்கும் முதல்வருக்கு அரசு இல்லம் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 24 ஆண்டுகளாக மாநில ஆட்சி நிர்வாகத்தை ”நவீன் நிவாஸ்” என்னும் வீட்டில் இருந்தபடியே முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கவனித்து வந்ததால், தற்போது புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வருக்கு அரசு இல்லம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை ஒடிஸாவில் முதல்வருக்கு அரசு இல்லம் இல்லை.

இதனால், பாஜக சார்பில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வர், தங்கியிருந்து ஆட்சி செய்ய அரசு சார்பில் இல்லம் தேடும் பணிகளை அம்மாநில பொதுநிர்வாகத் துறை மேற்கொண்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் (78) வெற்றி பெற்றது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வென்றது.

இதனால் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி ஒடிஸாவில் முடிக்கு வந்துள்ளது. பாஜக அரசு இம்முறை ஆட்சி அமைக்கிறது.

பாஜக சார்பில் முதல்வர் யார்? என்பது குறித்து இன்று (ஜூன் 11) ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டால், அவர் எங்கிருந்து மாநிலத்தை ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக தனது சொந்த வீட்டில் இருந்தபடியே நவீன் பட்நாயக் ஆட்சி செய்தார். இதனால் அரசு இல்லம் என்ற ஒன்று ஒடிஸாவில் இல்லை.

இதனால் தற்போது பதவியேற்க இருக்கும் புதிய முதல்வர் ஆட்சி செய்ய வீடு அல்லது அதற்குரிய இடம் தேடும் பணிகளை, மாநில நிர்வாகத் துறை மேற்கொண்டுள்ளது. ஆனால், முதல்வர் அறிவிக்கப்பட்டு விரைவில் பதவியேற்கவுள்ளதாலும் அதற்கு நேரமில்லை என்பதாலும், தற்போது உள்ள முதல்வர் குறைகேட்பு அலுவலகத்தை, புதிய முதல்வரின் தற்காலிக இல்லமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ஜே.பி. பட்நாயக், கிரிதர் கமாங் ஆகியோர் ராஜ்பவன் மற்றும் ஏஜி ஸ்கொயர் இடையே உள்ள அலுவலகத்தில் இருந்தபடியே மாநில ஆட்சியை மேற்கொண்டனர். அதனை பின்னாளில் முதல்வர் குறைகேட்பு அலுவலகமாக மாற்றினார் நவீன் பட்நாயக்.

தற்போது அந்த முதல்வர் குறைகேட்பு அலுவலகம்தான், மாநில ஆட்சி நடத்தவுள்ள புதிய முதல்வரின் வீடாக மாறவுள்ளது. இறுதி உத்தவுகள் பிறப்பிக்கப்பட்ட உடன், அங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.



.

Previous Post

12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு

Next Post

SGT Exam : இடைநிலை ஆசிரியர் தேர்வு அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
SGT Exam : இடைநிலை ஆசிரியர் தேர்வு அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

SGT Exam : இடைநிலை ஆசிரியர் தேர்வு அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In