Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: விஜய்க்குப் பாதுகாப்பு வழங்கும் துபாய் நிறுவனம்; பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2024
in அரசியல் செய்திகள்
1
TVK: விஜய்க்குப் பாதுகாப்பு வழங்கும் துபாய் நிறுவனம்; பின்னணி என்ன?
139
SHARES
224
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நடிகர் விஜய்யின் த.வெ.க., கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று  (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்குப் பாதுகாப்பு வழங்க துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பவுன்சர்களை விஜய் நியமித்திருக்கிறார்.

அந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?
Gentur நிறுவனம்

‘Gentur’ எனப்படும் துபாய் நிறுவனத்தைத்தான் விஜய் தனது பாதுகாப்புக்காக நியமித்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் பவுன்சர்கள்தான் விஜய்க்கான அத்தனை நிகழ்ச்சிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா, கட்சியின் கொடி அறிமுக விழா என விஜய் சமீபமாக நடத்திய அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள்தான் பொறுப்பேற்றுப் பாதுகாப்பு செய்து கொடுத்திருக்கின்றனர்.

சச்சின், வில் ஸ்மித், ஷாரூக் கான்…

2004-ம் ஆண்டில் துபாயை மையப்படுத்தித் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உலகம் முழுவதுமே பல நட்சத்திரங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியைச் செய்து வருகிறது. ஹாலிவுட்டில் வில் ஸ்மித், டாம் க்ரூஸ் போன்ற நடிகர்களுக்கும், பாலிவுட்டில் சல்மான் கான், ஷாரூக் கான், அமிதாப் பச்சன் ஆகியோருக்கும், விளையாட்டு வீரர்களில் சச்சின், ரொனால்டினோ, கபில் தேவ், வாசிம் அக்ரம் என உச்சபட்ச நட்சத்திரங்கள் பலருக்குமே இந்த நிறுவனம்தான் பவுன்சர்களை இறக்கிப் பாதுகாப்பு வழங்கி வருகிறது.

கமலுக்கு பாதுகாப்பு வழங்கும் Gentur நிறுவனம்

இதுபோக துபாயில் ஐ.பி.எல்., பாணியில் நடக்கும் ILT20 கிரிக்கெட் தொடர், பதான் படத்தின் ப்ரமோஷன் ஈவண்ட்கள், தமிழக முதல்வர் துபாய்க்குச் சென்றபோது அங்கே அவருக்கான பாதுகாப்புகள் எனப் பல ஈவண்ட்டுகளுக்கும் இந்த நிறுவனமே பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.

வி.சாலையில் விஜய்யின் மாநாடு நடைபெறவிருக்கும் திடலையும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே இந்த துபாய் நிறுவனம் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஒரு வாரமாகத் திடலுக்குள் வெளியாட்கள் யாரையுமே அனுமதிக்காமல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துப் பாதுகாப்பை வழங்கியிருந்தனர். விஜய்யைப் பாதுகாப்பாக மேடைக்கு அழைத்து வந்து நிகழ்வை முடித்து அனுப்பி வைப்பதும் இந்த நிறுவனத்தின் பொறுப்புதான்.

Previous Post

வடக்கு காஸாவில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

Next Post

தவெக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவெக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை!

தவெக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In