தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தவெக சார்பில் தனி வழித்தடம் கோரப்பட்டதாகவும் தெரிகிறது.
சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்துக்குதனியாக ஒருவழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இந்த வழியில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு, நிர்வாகிகளும் சுங்கச்சாவடியில் இருந்தவாறு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌❤️❤️👌❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😄😄😄