Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“தனுஷ் கட் அவுட்டிற்கு குடம் குடமாக பீர் அபிஷேகம்” அடுத்து என்னாச்சு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2024
in Default
1
“தனுஷ் கட் அவுட்டிற்கு குடம் குடமாக பீர் அபிஷேகம்” அடுத்து என்னாச்சு..
40
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தனுஷ் நடிப்பில் இன்று கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அங்கே தனுஷ் கட்அவுட்டிற்கு அவரது ரசிகர்களை பீரை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர்,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா என்பது ரொம்பவே முக்கியமானது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.

 Dhanush fans welcomed Captain Miller movie by anointing beer on his cutout

வழக்கமாகப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் தான் இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடுவார்கள். இந்தாண்டு திங்கள்கிழமை பொங்கல் விழா வரும் நிலையில், இன்றே பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல்: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகும். இது நீண்ட விடுமுறைக் காலம் என்பதால் உச்ச நடிகர்களின் படங்கள் எல்லாம் பொங்கல் விழாவுக்கு வெளியாகும்.. அதன்படி இந்தாண்டும் பல்வேறு பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படங்கள் வெளியாகிறது. அதேபோல விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியானது. புதுச்சேரியில் நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது..

 Dhanush fans welcomed Captain Miller movie by anointing beer on his cutout

கேப்டன் மில்லர்: பொதுவாகப் பெரிய பெரிய நடிகர்கள் நடிப்பில் படங்கள் வெளியாகும் போது நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வார்கள். ஆனால், புதுச்சேரியில் உள்ள தனுஷ் ரசிகர்கள் அதையெல்லாம் தாண்டி சென்றுவிட்டனர். அவர்கள் தனுஷ் கட்அவுட்டிற்கு பீர் அபிஷேகமும் செய்தனர்.. பூ தூவி, பூசனிக்காய், 108 தேங்காய்கள் உடைத்து தனுஷ் படத்தைக் கொண்டாடினர்,

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலையில் சென்ற பொது மக்களுக்கும் தனுஷ் ரசிகர்கள் கரும்புகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.. மேலும், தனுஷ் பெண் ரசிகர்கள் சாலையில் இறங்கி நடனமாடினர், இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Previous Post

பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை : பா.ஜ. பிரமுகர் கைது.

Next Post

ராமர் கோவில் திருப்பணிக்கு முழு ஆதரவை தெரிவித்தவர் எங்கள் தலைவர் – கேபி முனுசாமி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமர் கோவில் திருப்பணிக்கு முழு ஆதரவை தெரிவித்தவர் எங்கள் தலைவர் – கேபி முனுசாமி.

ராமர் கோவில் திருப்பணிக்கு முழு ஆதரவை தெரிவித்தவர் எங்கள் தலைவர் - கேபி முனுசாமி.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இப்படி பீர் அபிஷேகம் செய்த இந்த ரசிகர்களின் செயல் முட்டாள் தனமானது. படிக்க வேண்டிய வயதில் படிக்காமலும் வேலைக்கு போகாமலும் ரசிகர்கள் என்ற பெயரில் வெட்டியாக சுற்றி வருகின்றனர் தேவையில்லாத செலவுகளையும் செய்து வருகின்றனர் இவர்களின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் இதில் எந்த மாற்றமும் கிடையாது. இதற்கு முன்பு இருந்த நடிகர்களின் ரசிகர்களின் எதிர்காலம் அதாவது இந்த இப்போ நடந்து கொண்டிருக்கும் காலம் இருட்டாக தான் உள்ளது. சினிமாவுக்கு போனோமா சினிமாவை பார்த்தோமா வந்தோமா என்றே இருக்க வேண்டும் இந்த பீர் அபிஷேகம் பாலபிஷேகம் எல்லாம் தேவையில்லாதது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In