Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை : பா.ஜ. பிரமுகர் கைது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2024
in Default
1
பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை : பா.ஜ. பிரமுகர் கைது.
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ. பிரமுகர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார் (50). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்தது தொடர்பான வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் வெளியே வந்தார். இவர் மீதான வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சி பிரமுகராக உள்ளார்.இந்த நிலையில் நாஞ்சில் ஜெயக்குமார் சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்த பெண் டாக்டரிடம், தன்னை அரசியல் பிரமுகர் என அறிமுகப்படுத்தி பேசினார். சம்பவத்தன்று வழக்கம் போல் சிகிச்சைக்கு சென்ற போது, மிகவும் ஆபாசமான முறையில் நாஞ்சில் ஜெயக்குமார் அமர்ந்திருந்தாராம்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், அவரை கண்டித்துள்ளார். அப்போது அவரை ஆபாசமாக பேசி மிரட்டி சென்ற நாஞ்சில் ஜெயக்குமார், பின்னர் போனில் பெண் டாக்டரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதுடன், பெண் டாக்டரின் புகைப்படத்தை மார்பிங் செய்து தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், ஆசைக்கு இணங்க மறுத்தால் இணைய தளத்தில் வெளியிடுவேன் என்று கூறியும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நாஞ்சில் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

Previous Post

தலைமறைவாக உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்க: பல்கலை. ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்..

Next Post

“தனுஷ் கட் அவுட்டிற்கு குடம் குடமாக பீர் அபிஷேகம்” அடுத்து என்னாச்சு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தனுஷ் கட் அவுட்டிற்கு குடம் குடமாக பீர் அபிஷேகம்” அடுத்து என்னாச்சு..

"தனுஷ் கட் அவுட்டிற்கு குடம் குடமாக பீர் அபிஷேகம்" அடுத்து என்னாச்சு..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த நாஞ்சில் ஜெயக்குமார் எந்த கட்சியிலையாவது இருந்துட்டு போகட்டும். அந்தப் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக தொல்லை செய்தது குற்றம். வந்தா கூட்டிகிட்டு போ இல்லன்னா விட்டுட்டு போ அதை விட்டுட்டு வற்புறுத்தி தொல்லை பண்ண கூடாது.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In