Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விசாரணை வளையத்தில் 104 இந்தியர்கள்.. என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? – 7 லட்சம் பேரின் கதி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 6, 2025
in அரசியல் செய்திகள்
0
விசாரணை வளையத்தில் 104 இந்தியர்கள்.. என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? – 7 லட்சம் பேரின் கதி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பிறப்பிக்கும் உத்தரவுகள் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வருவது இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும், அதில், மெக்சிகோ, எல் சால்வடார் நாடுகளுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் இந்தியர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படிப்பு, வேலை, சுற்றுலா எனக்கூறி சென்றவர்களில் லட்சக்கணக்கானோர் விசா காலம் முடிந்தும், நாடு திரும்பாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பதாகவும், ஒரு பகுதியினர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி, 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுவதால், அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்க அரசால் கண்டுபிடிக்கப்பட்டு சிறைகளிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள 15 லட்சம் வெளிநாட்டினரை முதலில் நாடுகடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 18 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நாடு கடத்தும் பணிகளை அமெரிக்காவின் குடிவரவுத்துறை மேற்கொள்ளும் நிலையில், தற்போது ராணுவம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதற்கட்டமாக, 25 பெண்கள், 79 ஆண்கள் என 104 இந்தியர்களுடன், நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியாவில் இருந்து புறப்பட்ட சி-17 ரக ராணுவ விமானம், நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. இவர்களில் 33 பேர் குஜராத் மாநிலத்தையும், 33 பேர் ஹரியானா மாநிலத்தையும், 30 பேர் பஞ்சாப் மாநிலத்தையும் சார்ந்தவர்கள் எனவும், தலா 3 பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 12 பேர் குழந்தைகள் எனவும், 48 பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு, விசா மீறல் குறித்தும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்தும், வெளியுறவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு திரும்பியவர்கள் மீது வழக்குத் தொடரப்படுமா இல்லையா என்பது முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read | Gold Rate: தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை.. 2025ல் மட்டும் இவ்வளவு உயரப் போகுதா?

இந்நிலையில், இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவிய நிலையில், அது தவறானது என பத்திரிகை தகவல் அலுவலகமான PIB தெளிவுபடுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பும் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

எனினும், அமெரிக்காவின் முடிவை ஆதரிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், எந்த நாட்டிலும் சட்டவிரோதமாக தங்க வேண்டாம் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அடுத்த வாரம் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்று அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசவுள்ள நிலையில், சட்டவிரோத குடியேற்ற பிரச்சனை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 06, 2025 10:37 AM IST



.

Previous Post

மூன்றாவது காலாண்டு இழப்பு அதிகரிப்பு.. ஸ்விக்கி பங்கு விலை சரிவு

Next Post

பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In