Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிக அளவில் இளைஞர்கள், சிறுவர்கள் ஈடுபட்ட NLC முற்றுகை போராட்டத்தில் கலவரம் : அன்புமணி கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023 - Updated on July 29, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
3
அதிக அளவில் இளைஞர்கள், சிறுவர்கள் ஈடுபட்ட NLC முற்றுகை போராட்டத்தில் கலவரம் : அன்புமணி கைது
119
SHARES
192
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நெய்வேலி: என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

“மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி. நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள் விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்துக்கு நானே தலைமையேற்கிறேன். இதில் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்” என அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது என்எல்சி நுழைவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸ் போலீசார் தடுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு இடைய அன்புமணி ராமதாசை கைது செய்ய வாகனம் வரவழைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல் துறை வாகனத்தை கண்ணாடி அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. போலீசார் அவர்களை மிரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அவரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பாமகவினர் அவரை கைது செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மேலும் பதற்றம் அதிகரித்ததால் போலீசார் அவர்களை கலைந்து போக சொன்னபோதும் பாமகவினர் மறுத்து விட்டனர். தொண்டர்கள் சிலர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். பதிலுக்கு பாமகவினரும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் தண்ணீர் பீச்சியடித்து கலைத்தனர். இந்த போராட்டத்தில் பெருமளவில் இளைஞர்களும் சிறுவர்களும் ஈடுபட்டிருந்ததை காணமுடிகிறது.

தண்ணீர் பீய்ச்சியும் கூட்டத்தை கலைக்க போலீஸார் முயன்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போலீசாருக்கும் பாமகவினருக்கும் பெரும் போராட்டம் நடைபெற்றது. ஒரு வழியாக, பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு, தொண்டர்களிடம் பேசி அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் கலைந்து சென்றனர். இதன்பின் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்துகு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக என்எல்சி வளாகத்தில் பதற்றம் நிலவியது.

Previous Post

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது @ கோவை

Next Post

லக்கேஜ் ஏத்தியாச்சு.. ஆளுநர் எங்கப்பா? கர்நாடக கவர்னரை கழட்டிவிட்டு சென்ற விமானம்! பெங்களூரில் ஷாக்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லக்கேஜ் ஏத்தியாச்சு.. ஆளுநர் எங்கப்பா? கர்நாடக கவர்னரை கழட்டிவிட்டு சென்ற விமானம்! பெங்களூரில் ஷாக்

லக்கேஜ் ஏத்தியாச்சு.. ஆளுநர் எங்கப்பா? கர்நாடக கவர்னரை கழட்டிவிட்டு சென்ற விமானம்! பெங்களூரில் ஷாக்

Comments 3

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அங்குள்ள மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் அவர்களின் கோரிக்கை நியாயமானது எனவே நில எடுப்பு விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய பொதுமக்கள் அனைவரும் வேண்டுகிறார்கள்

    Reply
  2. பிரபா says:
    3 years ago

    ஏற்கனவே என் எல் சி நிறுவனம் வசம் பத்தாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உபரியாக உள்ளது. என்எல்சி நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே விலை நிலங்களை கொடுத்த உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காமல் வட இந்தியர்களுக்கு பணி கொடுக்கப்பட்டு வருகிறது. என்எல்சியால் தமிழ்நாட்டுக்கு தமிழர்களுக்கு ஒரு பலனும் இல்லை .ஒன்றிய அரசும் திமுக அரசும் பெரு நிறுவனங்களுக்கு நிலம் பிடித்துக் கொடுக்கும் துரோக
    பணியை செய்கிறது.

    Reply
  3. நந்தா says:
    3 years ago

    இளைஞர்களை தவறாக வழி நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்…!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In