விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அதனை லைக் ஷேர் செய்து மில்லியன் கணக்கில் தாண்ட வைக்க வேண்டும். மக்கள் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் யாரை சமூக ஊடகங்களில் பின்தொடர வேண்டும் என்பதை நெறிமுறைகளின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.
சமூக வலைதளங்களில் பதிவிடும்போது கருத்துகள் ரீதியான பதிலாக இருக்க வேண்டும். எந்த பதிவும் தரம் தாழ்ந்தோ, ஆபாச வார்த்தைகளோ, வன்முறையை தூண்டும் வகையிலோ பதிவுகள், பதில்கள் இருக்கக் கூடாது” என்று பேசினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் இப்போதைக்கு நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்கிற தகவல் கசிந்துள்ளது. கடந்த தேர்தலில் பஞ்சாயத்து, கவுன்சிலர் போன்ற இடங்களுக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் போலவே, இம்முறை வரும் சட்டமன்ற தேர்தலில் அவர்களை முன்னிறுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாருடனும் கூட்டணி கிடையாது, பிரச்சாரத்துக்கு நடிகர் விஜய் வரமாட்டார், இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்கலாம், தொகுதிக்குள் இப்போதில் இருந்தே நல்ல விஷயங்களைச் செய்து மக்களைக் கவர வேண்டும் என்பது உட்பட வேட்பாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளதாம்.
என்னது வேட்பாளரா?
ஆமாங்க… யார் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள் என்பது உட்பட முடிவெடுத்து அவர்களுக்கு தனித்தனியே உத்தரவுகள், எப்படி மக்களிடையே அணுக வேண்டுமென்கிற அறிவுரைகள் எல்லாம் தனித்தனி வகுப்புகளாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக வாக்கு சேகரிக்க, கூட்டம் கூட்ட, கட்சி வேலைச் செய்ய என ரசிக மன்ற நிர்வாகிகள் பெருமளவில் ஈடுபட்டிருந்தனர். இப்போது, அவர்களும் தேர்தலை நோக்கிச் செல்வதால், அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

