Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வத்சல்யபுரம் ஜெயின் அறக்கட்டளை : குழந்தைகளுக்கு மிளகாயை எரித்து புகையை உள்ளிழுக்கச் செய்த கொடூரம் : FIR பதிவு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2024
in Default
1
வத்சல்யபுரம் ஜெயின் அறக்கட்டளை : குழந்தைகளுக்கு மிளகாயை எரித்து புகையை உள்ளிழுக்கச் செய்த கொடூரம் : FIR பதிவு..
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் 21 குழந்தைகள் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நலக் குழு(CWC) கடந்த வாரம் இந்தூர் ஆதரவற்றோர் இல்லத்தில் திடீர் ஆய்வு நடத்தச் சென்றபோது இந்த அதிர்ச்சிகர சம்பவம் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளுக்கு அங்கு பணியில் உள்ள ஊழியர்கள் தங்களை சித்திரவதை செய்வதாக குழந்தைகள் அதிகாரிகளிடம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைகீழாக தொங்கவிடப்பட்டதாகவும், சூடான இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டதாகவும், ஆடைகளை கலைந்து புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அந்த குழந்தைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Representative – Graphical Image

மேலும், மிளகாயை எரித்து அதனால் ஏற்படும் புகையை உள்ளிழுக்கச் செய்து கொடுமை செய்ததாகவும் குழந்தைகள் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தூர் ஆதரவற்றோர் இல்லத்தில் பணிபுரிந்த அந்த ஐந்து ஊழியர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டு மத்தியப் பிரதேச காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

“நான்கு வயது குழந்தை குளியலறையில் பூட்டி வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்கள் வரை உணவு கொடுக்கப்படவில்லை” என்று FIR-யில் பதிவு செய்யப்பட்டிருப்பது குழந்தைகள் எதிர்கொண்ட கொடூரங்களை உணர்த்துகிறது.

Vatsalyapuram Jain அறக்கட்டளையால் நடத்தப்படும் அந்த ஆதரவற்றோர் இல்லம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரித்துள்ளனர்.

இந்த அறக்கட்டளைக்கு பெங்களூரு, சூரத், ஜோத்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Previous Post

“பாத்து பக்குவமா, பல்லு பட்ற போகுது..” : உதயநிதி பேட்டி குறித்து அண்ணாமலை கமெண்ட்..

Next Post

காலி மதுபாட்டிலுக்கு காசு.! இன்றுமுதல் நடைமுறை: குஷியில் மதுபிரியர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காலி மதுபாட்டிலுக்கு காசு.! இன்றுமுதல் நடைமுறை: குஷியில் மதுபிரியர்கள்!

காலி மதுபாட்டிலுக்கு காசு.! இன்றுமுதல் நடைமுறை: குஷியில் மதுபிரியர்கள்!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    நம் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு தலைவர் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர் இந்த மூவரும் அந்தந்த மாநில கவர்னரால் நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள் இது போன்ற ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று ஆய்வு செய்து ஏதேனும் குற்றங்களோ கொடுமைகளோ நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அதிகாரம் இந்த ஆணையத்திற்கு உள்ளது ஆனால் இந்த ஆணையம் செயல்படுவதே கிடையாது வந்தோமா போனோமா என்று இருக்கிறார்கள் இது போன்ற தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கப் போய் தான் மேற்சொன்ன ஜெயின் அறக்கட்டளை நிர்வகித்து வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது எனவே இந்த ஆணையங்கள் சிறப்பாக செயல்பட்டால் இது போன்ற தவறுகளும் நடக்காது எனவே சிறப்பாக செயல்பட வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In