Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“மன்னிப்பு கேட்கனும் இல்லைன்னா ரூ.1 கோடி தரனும்” – பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உதயசூரியன்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2024
in Default
1
“மன்னிப்பு கேட்கனும் இல்லைன்னா ரூ.1 கோடி தரனும்” – பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உதயசூரியன்..!
66
SHARES
106
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ள தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராய மரணம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு அவரது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக
நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று…

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 20, 2024

அந்த நோட்டீஸில், “ஜூன் 19 மற்றும் 20ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றமும், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

    மேலும், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வங்கியில் வைப்பீடு செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஆனால், பாமக நிறுவனர் மற்றும் தலைவர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கட்டுப்படுத்தியதாகவும், சாராயம் விற்பனை செய்ய துணை புரிந்ததாகவும், அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்படுவதாகவும், கள்ளக்குறிச்சியில் 30 ஆயிரம் பேர் கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது என்றால், ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை. அவர்களைக் காப்பாற்ற முயல்வது குற்றம் எனத் தெரியாதா? விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியாக நேரில் ஆஜராகி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை அளிக்கலாம். அதனால், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    Previous Post

    தொடர்ந்து செக்ஸ் சர்ச்சையில் சிக்கும் தேவகவுடா குடும்பம்.. அடுத்த பேரனும் சிக்கினார்.

    Next Post

    முதல்வர் கிராமசாலை திட்டம்: 10,000 கி.மீ கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு..!

    Makkal Aanaiyam

    Makkal Aanaiyam

    Authenticated live Tamil flash news

    Next Post
    முதல்வர் கிராமசாலை திட்டம்: 10,000 கி.மீ கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு..!

    முதல்வர் கிராமசாலை திட்டம்: 10,000 கி.மீ கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு..!

    Comments 1

    1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
      2 years ago

      எம்எல்ஏ உதயசூரியன் மற்றும் எம்எல்ஏ கார்த்திகேயன் இவர்கள் இருவரை பற்றியும் கள்ளச்சாராய மரணத்திற்கு இவர்கள் உடந்தையாக இருந்தது பற்றியும் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் நீங்கள் இந்த நோட்டீஸ் அனுப்பும் மிரட்டல் எவரிடமும் பலிக்காது

      Reply

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    • About
    • Advertise
    • Privacy & Policy
    • Contact
    Call us: +91 44 3586 5999

    © GKM Apps | Software development firm

    No Result
    View All Result
    • Home
    • அரசியல் செய்திகள்
    • தமிழ்நாடு செய்திகள்
    • சமீபத்திய செய்திகள்
    • டிரெண்டிங் செய்திகள்
    • ஹாட்ஸ்டார்

    © GKM Apps | Software development firm

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In