Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முதல்வர் கிராமசாலை திட்டம்: 10,000 கி.மீ கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2024
in Default
1
முதல்வர் கிராமசாலை திட்டம்: 10,000 கி.மீ கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு..!
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கிராம சாலைகள் மேம்பாடு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் பேசியதாவது; ”ஊரக பகுதியில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சியே திமுகவின் இலக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. கிராம சாலைகள், கிராம மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது.

முதலீட்டுக்கும், ஊரக மக்களின் நலனுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு ஊரக பகுதிகளில் வணிக பணிகளை அதிகப்படுத்துவது, அதன் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகரித்து ஊரக வளர்ச்சிக்கும் வழி வகுக்குற தரமான சாலைகள் கிராம மக்களின் வருமானத்தை உயர்த்துகிறது.

ஏற்கனவே, கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை 8 ஆயிரத்து 120 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரக சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல்வரின் கிராமசாலை திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் பத்தாயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Previous Post

“மன்னிப்பு கேட்கனும் இல்லைன்னா ரூ.1 கோடி தரனும்” – பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உதயசூரியன்..!

Next Post

கள்ளக்குறிச்சியில் CPI கம்யூனிஸ்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கள்ளக்குறிச்சியில் CPI கம்யூனிஸ்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!

கள்ளக்குறிச்சியில் CPI கம்யூனிஸ்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ரோடு போடுவதில் ஊழல்களை தவிர்த்து தரமான முறையில் ரோடுகளை அமைக்க பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In