Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு: மாம்பலம் போலீஸார் இருவர் பணியிட மாற்றம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 17, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு: மாம்பலம் போலீஸார் இருவர் பணியிட மாற்றம்
63
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் காசிம் (45) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 15-ம் தேதி மதியம் சென்ற, மாம்பலம் காவல் நிலைய காவலர்கள் இருவர் பிரியாணி கேட்டுள்ளனர். அப்போது, இன்னும் வியாபாரம் ஆகவில்லை. எனவே, பணத்தைக் கொடுத்து பிரியாணி வாங்கிச் செல்லுமாறு காசிம் கூறினாராம்.

இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற காவலர்கள், நேற்று முன்தினம் இரவு மீண்டும் காசிம் கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டுள்ளனர். மேலும், இனி கடைநடத்த முடியாது என்று அவரை மிரட்டியதுடன், பிரியாணிக்கான பணத்தைக் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, இரு காவலர்களும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மேலும், காவலர்கள் ரகளையில் ஈடுபடுவதை செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர்.

இதையடுத்து காவலர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின்பேரில் காசிம் கடைக்குச் சென்ற மாம்பலம் போலீஸார், பிரியாணி கடை உரிமையாளரிடம் புகார் பெற்று, இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அந்த வாகனங்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆனந்த், ஜெயபால் ஆகியோருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

அதேநேரத்தில், காவலர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில், காவலர்கள் அத்துமீறியது தெரியவந்தது.

இதையடுத்து, கடையில் தகராறு செய்ததாக காவலர்கள் ஆனந்த் மற்றும் ஜெயபால் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

.

Tags: இரவரஇலவசமககடடதகரறபணயடபரயணபலஸரமமபலமமறறம
Previous Post

நாங்குநேரி சம்பவம்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Next Post

மாணவர்களிடம் கஞ்சா சாக்லெட் விற்பனை: ஒடிசா இளைஞர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாணவர்களிடம் கஞ்சா சாக்லெட் விற்பனை: ஒடிசா இளைஞர் சென்னையில் கைது

மாணவர்களிடம் கஞ்சா சாக்லெட் விற்பனை: ஒடிசா இளைஞர் கைது

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அந்த இரு காவலர்களும் பணியிடை மாற்றம் என்பது தண்டனை அல்ல குறைந்தபட்சம் அவர்களை சஸ்பெண்ட் செய்து இருக்கலாம் இப்பொழுது வேறு ஒரு காவல் நிலையத்திற்கு போய் அந்த காவல் நிலைய லிமிடில் வரும் பிரியாணி கடையில் மீண்டும் ஓசியில் பிரியாணி கேட்க போகிறார்கள் அவ்வளவுதான் இவர்களை ஆயுதப்படைக்காவது மாற்ற வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In