Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிக்கிய சார்பதிவாளர் : கோவையில் பரபரப்பு.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 23, 2024
in Default
1
சிக்கிய சார்பதிவாளர் : கோவையில் பரபரப்பு.!
185
SHARES
298
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகமாபுதூர் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து அது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையில் 6க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரப்பதிவு மற்றும் அதற்கான கட்டணம் சரியாக உள்ளதா? லஞ்சம் பெறபட்டுள்ளதா? என பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இன்று காலை வரை நடைபெற்றது.

சார் பதிவாளர் செல்வபாலமுருகன் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை

இந்த சோதனையின் போது, கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இது குறித்து அன்னூர் சார் பதிவாளரான செல்வபாலமுருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Previous Post

கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்கவேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!

Next Post

ஜெ-வின் வழக்கு செலவு ரூ5 கோடி: கர்நாடகாவிற்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெ-வின் வழக்கு செலவு ரூ5 கோடி:  கர்நாடகாவிற்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

ஜெ-வின் வழக்கு செலவு ரூ5 கோடி: கர்நாடகாவிற்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையின் போது லஞ்ச பணம் சிக்கினாலும் இது போன்ற சார் பதிவாளர்களை கைது செய்ய இயலாது. ஆனால் நேரடியாக குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு நடத்தி தண்டனை வாங்கி கொடுக்க இயலும்.. ஆனால் இந்த நடவடிக்கைக்கு சார் பதிவாளர்கள் பயப்படுவதே கிடையாது ஏனென்றால் மூத்த வழக்கறிஞர்களை வைத்து அதிக பணம் செலவு செய்து உயர்நீதிமன்றத்தின் மூலம் வழக்கையே ரத்து செய்து விடுகின்றனர் எனவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்கள் தரப்பில் சரியான வழக்கறிஞர்களை வைத்து வழக்கை ரத்து செய்யாமல் பார்த்துக் கொண்டு சார் பதிவாளர்களை தண்டிக்கும் வகையில் செயல்பட வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In