Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்கவேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 23, 2024
in Default
0
கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்கவேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!
22
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர், எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன்

அமைச்சர் சிவசங்கர், எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன்

பட்டினப்பாக்கத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கான அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அதோடு, பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கட்டிடத்தைத் திறந்து வைத்து பணி ஆணைகளை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

100 புதிய பேருந்துகள் துவக்க விழா

100 புதிய பேருந்துகள் துவக்க விழா

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார். ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்குத் தெரியவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்குக் காரணம் ஒன்றிய அரசு நமக்குச் சேர வேண்டிய நிதியைக் கொடுக்காமல் இருப்பதால் தான் என்றார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், இந்த ஆண்டு போக்குவரத்துத் துறைக்கு புதிதாகப் பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டதன் அடிப்படையில், முதற் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டு, அதனை முதல்வர் துவங்கி வைத்ததாகக் கூறினார்.

100 புதிய பேருந்துகள் துவக்க விழா

100 புதிய பேருந்துகள் துவக்க விழா

இன்னும் இரண்டு மாதத்திற்குள்ளாக 1,566 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்றார். அடுத்த கட்டமாக டெண்டர் விடப்பட்டுள்ள புதிய பேருந்துகள் 5 மாதத்திற்குள்ளாக, படிப்படியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றார். அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கான பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதன் காரணமாகப் பேருந்துகளை இயக்க சிரமம் இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்

மேலும், 24ம் தேதிக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் என அறிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப்பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விட்டன. சிஎம்டிஏ ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கான தேவையான அனைத்தையும் செய்துகொடுத்துள்ளார்கள். இன்னும் கூடுதலாக என்ன வசதி வேண்டுமோ, அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதனால், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முழுமையாகப் பேருந்துகளை அங்கிருந்து இயக்கி வருகிறது. இவர்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்பதுதான் போக்குவரத்துத் துறை சார்பாக வைக்கப்படும் அன்பான வேண்டுகோள்” என்றார்.

Previous Post

இந்தியாவிலேயே முதல்முறையாக 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்..

Next Post

சிக்கிய சார்பதிவாளர் : கோவையில் பரபரப்பு.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிக்கிய சார்பதிவாளர் : கோவையில் பரபரப்பு.!

சிக்கிய சார்பதிவாளர் : கோவையில் பரபரப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In