Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க சென்ற இடத்தில் சோகம்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
1
மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க சென்ற இடத்தில் சோகம்…
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை மாவட்டம் சூலூர் அருகே குட்டைக்கு நீச்சல் பழகச் சென்ற தந்தை, 2 மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மணிகண்டன். கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் மணிகண்டன், தனது 15 வயது மகள் தமிழ்செல்வி மற்றும் 13 வயது அண்ணன் மகள் புவனா ஆகிய இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையில் குளிக்க அழைத்து சென்றுள்ளார். 

மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வி மற்றும் புவனா ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளனர். இருவரையும் காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் சேற்றில் சிக்கிக் கொண்டதால் மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குளிக்கச் சென்ற மூவரும் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த மணிகண்டனின் மனைவி, குட்டைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கரையில் செருப்புகள் மட்டுமே கிடந்ததால் சந்தேகம் அடைந்த அவர், ஊர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் குட்டையின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கியிருந்த மூவரது உடல்களையும் மீட்டனர். மூவரது உடல்களையும் கைப்பற்றிய சுல்தான்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த டிஎஸ்பி தங்கராமன், பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும் சேறு நிறைந்த ஆழம் அதிகம் உள்ள இது போன்ற நீர் நிலைகளில் குளிக்க தடை என எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார். மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க குட்டைக்கு அழைத்துச் சென்ற தந்தை உட்பட மூவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் இவர்தான் – நாராயணன் திருப்பதி கலாய்..

Next Post

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை – திருமா போடும் திடீர் குண்டு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை – திருமா போடும் திடீர் குண்டு!

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை - திருமா போடும் திடீர் குண்டு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த நாய நம்பி சென்ற இரண்டு சிறுமிகள் மரணம் அடைந்துள்ளார்கள் இது மிகவும் வருத்தமான செய்தி. இரண்டு சிறுமிகளை அழைத்துச் சென்ற நாய் செத்துப் போச்சு இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால் அந்த நாய்க்கே நீச்சல் தெரியாது எனவே தெரியாது என்றால் தெரியாது என்றே தனது பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும் இந்த நாய நம்பி சென்ற இரண்டு குழந்தைகள் மரணம் அடைந்துள்ளார்கள் மிகவும் வருத்தம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In