வேலூர் மாவட்டத்தில் டார்லிங் ரெசிடென்சி ஹோட்டலில் தரமற்ற உணவு வழங்குவதாக சாப்பிட சென்ற வாடிக்கையாளர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

அங்கு Normal meals ₹ 130/- , Special meals ₹ 200/-க்கும் விற்கப்படுகிறது. ஆனால் விலைக்கு ஏற்ற உணவு கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மிகவும் அசுத்தமான முறையில் உணவுகள் கையாளப்படுவதும் தரமில்லாமல் இருப்பதும் கவலையை அளிக்கிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள். பல நேரங்களில் Food Poison ஏற்பட்டு மக்களுக்கு உடல்நல குறைபாடுகளும் ஏற்படுகிறது.
வெளி ஊர்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வேலூரில் புகழ்பெற்ற தங்கக் கோவில் (Golden temple) காண்பதற்காக மற்றும் பக்கத்திலுள்ள மாவட்டங்களில் இருந்து வரும்
மக்கள் நல்ல ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நினைத்து டார்லிங் ரெசிடென்சிக்கு சென்று சாப்பிட வருகின்றனர். இந்த சுற்றளவில் வேறு உணவகங்கள் இல்லாததால் மக்கள் இந்த உணவகத்தையே நாட உள்ளது.
உணவு பரிமாறுபவர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை, நீண்ட நேரம் காக்க வைப்பது மற்றும் உணவுகள் தரமற்றதாக இருப்பதும் மக்களிடம் கவலையை ஏற்படுத்துகிறது.
உடனே உணவு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓட்டலில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதை குறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், சுற்றுலா வந்து செல்லும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

